தி.மு.க.வில் இருக்கும் ஹிந்துக்கள் தங்களது தவறை உணர்ந்து திருந்தி, அக்கட்சியிலிருந்து விரைவில் திரும்பி வந்து விடுவார்கள் என்று பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் சண்டை பயிற்சியாளராக அறிமுகமாகி, தற்போது இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் சர்வதேச திரைத்துறையிலும் சண்டை மாஸ்டராக வலம் வருபவர் கனல் கண்ணன். இந்து முன்னணி அமைப்பில் நிர்வாகியாக இருக்கும் இவர், நமது மீடியான் சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஸ்டாலின் எல்லோருக்கும் பொதுவான முதல்வராக இருந்து கொண்டு, ஹிந்து மதத்தை மட்டும் அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதையெல்லாம் பார்த்துவிட்டு, தி.மு.க.வில் இருக்கும் ஹிந்துக்கள் தற்போது யோசிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆகவே, அக்கட்சியில் இருக்கும் ஹிந்துக்கள் விரைவில் திருந்தி, திரும்பி வந்த விடுவார்கள்.
சுகி சிவம் போன்றவர்கள் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசித்தான் வயிறு வளர்க்கிறோம் என்பது தெரியாமல் ஹிந்து மதத்தைப் பற்றியே தவறாகப் பேசுகிறார். அவரை எல்லாம் எந்த ரகத்தில் சேர்ப்பது என்பதே தெரியவில்லை. ராணுவ வீரர்களை பொறுத்தவரை, வடமாநிலங்களில் அவர்கள் டீ சாப்பிட்டால் அக்கடைக்காரர்கள் அவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். அந்தளவுக்கு ராணுவ வீரர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ராணுவ வீரரை அடித்துக் கொல்லும் நிலை இருப்பது வேதனையாக இருக்கிறது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான ஹிந்து சொந்தங்கள் கலந்துகொண்டது பெருமைக்குரிய விஷயம்.
தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையை முதலில் அகற்ற வேண்டும். ஹிந்துக்கள் உண்டியலில் போடும் பணத்தை வைத்து முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கும், ரம்ஜான் பண்டிகையின்போது நோன்பு கஞ்சி ஊற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். மேலும், இந்து கோயில்களில் இ.ஓ. உள்ளிட்ட மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கிரிப்டோ கிறிஸ்தவர்கள். இவர்கள் கோயில் உண்டியல் காசில் இருந்துதான் தங்களது வாகனங்களுக்கு டீசல் போட்டு உல்லாசமாக சுற்றுலா சென்று வருகிறார்கள். ஆகவே, ஹிந்து சொந்தங்கள் யாரும் உண்டியலில் காசு போடாதீர்கள். அதேபோல, கோயிலை அவமதிக்கும் வகையில் கோயிலுக்குள்ளேயே கழிப்பறை கட்டி வைத்திருக்கிறார்கள்” என்பன உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
கனல் கண்ணனின் முழு பேச்சு விவரத்தை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்…