தி.மு.க அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் ஹிந்தி மொழி இடம் பெற்று இருப்பது குறித்து கருத்து தெரிவிக்காமல் மெளனம் காக்கும் மதுரை எம்பி.
CPIM கட்சியின் மூத்த தலைவரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் வெங்கடேசன். ரயில் டிக்கெட்டில் ஹிந்தி இருக்கிறது. பேருந்து நிலையத்தில் ஹிந்தி இருக்கிறது. மத்திய அரசு நடத்தும், தேர்வில் ஹிந்தி இருக்கிறது. ரயில் டிக்கெட்டில் ஹிந்தி என்று, ஹிந்தி மொழிக்கு எதிராக, தொடர்ந்து தனது கருத்தினை டுவிட்டரில் தெரிவிப்பது இவரின் முழு நேர பணி என்பது அனைவரின் கருத்து.
இந்நிலையில் ஹிந்துக்கள் பண்டிகையான பொங்கலுக்கு, தி.மு.க அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு பையினை வழங்கி வருகிறது. வெல்லம், ரவை, உப்பு, உள்ளிட்ட சில பொருட்களில் ஹிந்தி வாசகம் கொண்ட பெயர்கள் இடம் பெற்று உள்ளது. ஹிந்தி மொழிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்தும் வரும் மதுரை எம்பி.
தி.மு.க அரசு வழங்கி வரும் பொங்கல் பை குறித்து இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என்று மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.