பாரதத்தின் அடுத்தடுத்த ராஜ்ய நகர்வுகள் – கனத்த மவுனம் காக்கும் பிரிவினைவாதிகள் – உண்மை பின்னணி

பாரதத்தின் அடுத்தடுத்த ராஜ்ய நகர்வுகள் – கனத்த மவுனம் காக்கும் பிரிவினைவாதிகள் – உண்மை பின்னணி

Share it if you like it

கடந்த காலங்களில் சீனா பெரும் திட்டமிடலோடு இந்து மகா சமுத்திரத்தில் இருந்த அத்தனை நாடுகளிலும் தனது ராணுவ தளத்தை நிலை நிறுத்தியது. சீன முத்துமாலை என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட இந்த திட்டம் சீனாவின் ஆளுகை திட்டம் என்பதை கடந்து பாரதத்தை நான்கா புறமும் முற்றுகையிடும் ஒரு ராணுவ நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. 10 ஆண்டுகால காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இருந்ததால் இதையெல்லாம் தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ அவர்களுக்கு அவசியமில்லாமல் இருந்தது. பெரும் பின்னடைவில் இருந்த பாரதத்தின் ராஜ்ஜியம் இந்த விஷயங்களை பற்றி வருந்துகிறோம் கண்டிக்கிறோம் என்று ஆதங்கத்தை மட்டுமே பதிவு செய்ய முடிந்ததே தவிர எதிர்த்து கேள்வி கேட்கவோ ராஜ்ய ரீதியாக நகர்வுகளை முன்னெடுத்து தடுத்து நிறுத்தும் வலிமையிலோ இல்லை. அதனால் திரும்பிய பக்கம் எல்லாம் சீனா தனது கைவரிசையை காட்டி பாரதத்தை பல வகையிலும் அச்சுறுத்தி வந்தது.

உண்மையில் பாரதம் ராஜ்ய ரீதியாகத்தான் பின்னடைவாக இருந்ததே தவிர ராணுவ ரீதியாகவோ மக்களின் தேசிய எழுச்சி இறையாண்மை பாதுகாப்பு அதன் காரணமாக உயிரையும் துச்சமாக நினைக்கும் தேசிய உணர்விலிருந்து எப்போதும் பின்வாங்கியது இல்லை . ஆனால் இதையெல்லாம் உணராத இங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அப்போதைய பாஜகவின் வாஜ்பாய் அரசு காங்கிரசின் மன்மோகன் சிங் அரசுகளை தினமும் வசைப்பாடி வந்தது. சீனா அங்கே கால் பதித்து விட்டது. இங்கே கட்டமைப்புகளை செய்து வருகிறது .கூடிய விரைவில் பாரதத்தின் மீது போர் தொடுத்து அடிமைப்படுத்த போகிறது என்று தினமும் ஒரு பூச்சாண்டி களை கட்டவிழ்த்து விட்டார்கள்.

புற்றிசல்கள் போல முளைத்திருந்த பிரிவினைவாதிகளும் மதமாற்ற வியாபாரிகளும் மத பயங்கரவாதிகளுக்கு தரகு வேலை பார்க்கும் குபீர் போராளிகளும் தினம்தோறும் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் .பாரதம் விரைவில் சீனாவின் அடிமையாகும். அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போவீர்கள்? இப்போதே தனிநாடு கோரிக்கையோடு தயாரானால் சீனாவின் முழு ஆசியோடு நாமெல்லாம் பத்திரமாக தனிநாட்டில் வாழ முடியும் . அங்கே பாலாறும் தேனாறும் ஓடும் . சீனா இந்தியாவை தான் எதிரியாக பார்த்து அடிமைப்படுத்துமே தவிர தமிழ்நாட்டை இல்லை . நமக்கு தங்கத்தட்டில் பாலும் பழமும் இட்டு தரும் என்றெல்லாம் மேடைதோறும் முழங்கினார்கள்.

இலங்கை விவகாரம் முதல் மாலத்தீவு நேபாளம் என்று அண்டை நாடுகளின் ஒவ்வொரு விவகாரத்திலும் ராஜ்ய ரீதியான பின்னடைவு காணும் போது பாரதத்தின் தோல்வியை அண்டை நாடுகளின் வெற்றியை இங்கு உள்ள ஒவ்வொரு பிரிவினைவாதியும் தங்களின் சொந்த வெற்றியாகவே கொண்டாடினார்கள். குறிப்பாக சீனா பாகிஸ்தான் என்று பகை நாடுகளோடு பாரதத்திற்கு முருகல் வந்தால் பாரதம் ஏதேனும் எதிர் நடவடிக்கை எடுக்க கூடும் என்ற நிலையில் யுத்தம் வேண்டாம் என்று பம்முவார்கள். பாரதம் தாக்குதலுக்கோ அபாயங்களுக்கோ உள்ளாகும் போது அதை வெற்றியாக கொண்டாடுவார்கள். எந்த நிலையிலும் பாரதத்தை அவமதிப்பதும் சிதைப்பதும் ஒன்றே தங்களின் இலக்கு என்று திட்டமிட்டு செயல்பட்டார்கள்.

ஆனால் இன்று உலக அளவில் பாரதத்தின் நிலை ஓங்கி நிற்கிறது. சீனாவின் நிலை தலைகீழாக மாறிவிட்டது. சீனாவின் இந்து மகா சமுத்திர முத்துமாலை திட்டத்தை மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளில் சத்தமில்லாமல் அறுத்தெறிந்து விட்டது. சீனாவும் அந்தத் திட்டத்தை அப்படியே மறந்து விட்டு கொரோனா முடக்கத்தில் மூழ்கி விட்டது. தரைவழி சாலை திட்டத்தை முன்வைத்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வழியாக பெரும் பொருளாதார சாலையை கட்டமைத்து எக்கனாமிக்கல் காரிடார் என்று ஒட்டுமொத்த ஆசியாவையும் அதன் மூலம் இதர உலக நாடுகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சீனா திட்டமிட்டது. இன்று அந்தத் திட்டத்திற்கும் மோடி முடிவுரை எழுதிவிட்டார்.

சீனா தனது வல்லாதிக்கத்தை நிலை நிறுத்தவும் தனது பொருளாதாரத்தை மட்டுமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தோடு முன்மொழிந்த தரைவழி சாலை திட்டத்தை கண்டம் விட்டு கண்டம் இணைக்கும் பாரதத்தில் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்க ஐரோப்பா நாடுகள் வரையும் உலகின் பெரும்பாலான நாடுகளை சாலை மார்க்கத்தில் இணைக்கும் ஒரு பெரும் சாலை வழி திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார் . அதன் மூலம் அனைத்து நாடுகளின் பொருளாதார வர்த்தகம் சரக்கு கையாளுகை எளிதாக மாறும்படியான ஒரு முன்மொழிவை கொடுத்தார் . அதை பாரதத்தின் தனிப்பட்ட திட்டமாக இல்லாமல் ஜி 20 நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பாக உலக நலனுக்காகவே முன்மொழிந்திருக்கிறார்.

ஒருவேளை இந்த திட்டம் பாரதத்தின் தனிப்பட்ட திட்டமாக இருந்திருந்தால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பொருளாதார இழப்புகளையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தேசம் எதிர் கொண்டிருக்கும் . இதர உலக நாடுகளும் தங்களின் உளவுத்துறை மூலம் பாரதத்தின் இந்த திட்டத்திற்கு எதிராக பெரும் குளறுபடிகளை விளைவித்திருக்கும்..அதை வைத்து இங்கிருந்த பிரிவினைவாதைகளும் தேச விரோதிகளும் நிச்சயம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால் இந்த மாபெரும் திட்டத்தை திட்ட வரைபோடும் செயல் வடிவமாகவும் தாமே முன்மொழிந்ததோடு அதை ஜி 20 நாடுகளின் பொதுவான பங்களிப்பாகவும் ஒரு இருக்கும் படியாக மோடி உலக அளவில் தனது ராஜ்ஜிய வெற்றியை பறைசாற்றி விட்டார். இதன் மூலம் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் ஏழை நாடுகள் என்று அனைத்து நாடுகளின் பொருளாதார பங்களிப்பிற்கும் இது பெரும் நலம் பயக்கும் திட்டம் என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இதை தாமே முன்வந்து பெரும் ஆரவாரத்துடன் வழிமொழிந்தது . அதே நேரத்தில் தனது திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியான துக்கத்தில் சீனா இந்த ஜி 20 மாநாட்டையே புறக்கணித்து மூலையில் முடங்கி விட்டது . சீனாவை ஆதரித்து பேசவும் முடியாமல் மோடியை எதிர்த்து இந்த சாலை திட்டத்திலிருந்து விடுபடவும் முடியாமல் பாகிஸ்தான் வாயை திறக்காமல் தனது நிலையை காப்பாற்றிக் கொண்டது.

அடுத்ததாக கனடாவில் மரணித்த காலிஸ்தான் பயங்கரவாதியின் மர்ம மரணத்தை முன்வைத்து கனடா வெளிப்படையாக பாரதத்தின் உளவுத்துறை வெளியுறவுத் துறையின் மீது குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. அதன் காரணமாக கனடாவில் இருந்த இந்திய தூதரையும் வெளியேற்றி இருக்கிறது. அதன் ஆதரவாக நட்பு நாடுகள் சர்வதேச அமைப்புகளின் உதவிக்கோரி யாருமே கை கொடுக்காத நிலையில் தனிமைப்பட்டு நிற்கிறது .ஆனால் பாரதத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் கனடாவிற்கு அறிவுரை வழங்கி வருகிறது .மறுபுறம் இலங்கை கனடா பயங்கரவாதிகளை பாதுகாப்புடனும் வசதியாகவும் வாழ்வதற்கான தளமாக மாறி வருகிறது .அதன் மூலம் உலக நாடுகள் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி சீரழிவதை பற்றி கவலை இன்றி பொறுப்பற்று நடக்கிறது என்று வெளிப்படையாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி ஃசப்ரி கனடா மீது குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

உலக அளவில் எந்த ஒரு விவகாரத்திலும் இலங்கை இந்தியாவை பின்பற்றாது. வேண்டுமென்றே பல்வேறு விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே இலங்கையின் வரலாறு. காரணம் இலங்கையில் இருக்கும் போராட்ட குழுக்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இந்திய தமிழகத்தில் கடந்த காலங்களில் இருந்த பெரும் ஆதரவு. பாரதத்தின் ஆட்சியாளர்கள் மத்தியில் உளவுத்துறை வெளியுறவுத் துறை மூலம் செய்திட்ட ஆதரவு உதவிகள் காரணமாக இலங்கை எப்போதும் ஒரு வன்மத்தோடு இந்திய வெளியுறவுத் துறையை அணுகும். அதனால் எந்தவித யோசனையும் இன்றி பாரதத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே உலக அளவில் எந்த ஒரு விவகாரத்திலும் எடுக்கும்.

அப்படிப்பட்ட வரலாறை கொண்ட இலங்கை இன்று கனடா விவகாரத்தில் பாரதத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கும் விதமாக கனடா மீது குற்றம் சாட்டுகிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகளை முன் வைத்து உலக அளவில் பாரதம் சமர்ப்பித்தவரும் உளவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை சார்ந்த ஆவணங்களுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் விதமாக கனடா நாடு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடுதான் அது பயங்கரவாத ஆதரவு நாடு தான் என்பதை பட்டவர்த்தனமாக இலங்கை வலியுறுத்துறை அமைச்சர் பேசியிருக்கிறார் . இதன் மூலம் கனடாவிற்கான பிடி மேலும் இருகும் .அதே நேரத்தில் பாரதத்திற்கான ஆதரவும் மேலும் வலுவாகும்.

இலங்கையை பின்னிருந்து இயக்குவது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தான் .அதன் மூலம் தான் கொடுக்கும் உதவிகளுக்கு பிரதிபலனாக இலங்கையை கனடாவிற்கு எதிராக தூண்டிவிடுகிறது பாரதம் என்ற குற்றச்சாட்டு இல்லை. கனடாவிற்கு எதிராக உலக அளவில் ஒரு பெரும் அவமதிப்பை முன்னெடுக்க வன்மம் கொண்டு பாரதத்தின் வெளியுறவுத்துறை இலங்கையை தூண்டிவிடுகிறது என்ற குற்றச்சாட்டு இல்லை. காலிஸ்தான் பயங்கரவாதம் என்ற பெயரில் கனடாவில் வாழும் சீக்கிய மக்களுக்கு எதிராக பாரதம் செயல்படுகிறது. இது ஆரியம் பாசிசம் வழி வந்தவர்களின் திட்டமிட்ட இன அழிப்பு என்ற விஷம பிரச்சாரம் இல்லை. கனடாவில் மையம் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் அரசியல் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவான லாபி இவற்றையெல்லாம் சிதைக்கும் நோக்கில் தான் பாரதம் செயல்படுகிறது . அதன் மூலம் தனித்தமிழ் ஈழம் தமிழர்களின் தனி நாடு கோரிக்கை உள்ளிட்டவற்றை ஆதிக்க மனோபாவத்தில் மோடி அரசு நசுக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் இல்லை . ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் மயான அமைதி நிலவுகிறது.

உண்மையில் இவர்கள் இந்த தேசத்தின் மீது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட பற்றுதலும் அபிமானம் உள்ளவர்களாக இருந்தால் கடந்த காலங்களில் பாரதத்தை சீனா முற்றுகையிடுகிறது என்று அச்சம் கொண்டு மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் ஆனால் வாஜ்பாயையும் மோடியையும் சீனா மண்டியிடுவதாக கேலி பேசியவர்கள் . இன்று அதே சீனாவின் ராஜ்ய நகர்வுகளை எல்லாம் தகர்த்து பாரதத்தை உலகில் பாதுகாப்பான வல்லரசாக நிலை நிறுத்திய மோடி அரசை பாராட்டி இருக்க வேண்டும் .வரவேற்று வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். ஆனால் மயான அமைதி காக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் தேசத்தின் நலனையோ பாதுகாப்பையோ கருதி அல்ல . கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இங்கு பிரிவினை கருத்துக்களை விதைக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். மக்களிடம் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியாளர்கள் பாதுகாப்பு அமைப்புகள் மீது அதிருப்தி ஏற்பட செய்து இங்கு ஒரு கலவர சூழலை பதட்டமான மன நிலைமையிலேயே மக்களை வைத்திருக்க வேண்டும் என்ற சதித்திட்டம் மட்டுமே என்பது தெளிவாகிறது.

குறைந்தபட்சம் சீக்கியர்களுக்கு ஆதரவாகவும் மோடி அரசுக்கு எதிராகவும் ஒரு சமூக நீதியை யாவது அவர்கள் குறிப்பிட்டு பேசி இருக்கலாம் . கனடாவில் இருக்கும் ஈழத் தமிழர் அரசியல் லாபிக்காகவாவது அடுத்த குறி தமிழர்கள் தானா ? என்று ஒரு தமிழ் அரசியலையாவது அவர்கள் செய்திருக்கலாம். ஆனால் சொல்லி வைத்தார் போல பல வாரங்களாக கனடா இந்தியா இடையே ராஜ்ஜியம் முருகல் நடந்த முடிந்த போதிலும் ஒரே ஒரு பிரிவினைவாத அமைப்பு ஒரு போராளியௌ இதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது ஆச்சரியமே. கனடா குறிப்பிடுவது போல் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரணத்தின் பின்னணியில் இந்திய உளவுத்துறையோ வெளியரவு துறையோ இல்லை என்று தீர்க்கமாக பாரதம் மறுத்திருப்பதை அவர்கள் இன்னமும் நம்பவில்லை என்பதே இதை வெளிப்படுத்துகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல் பல்வேறு பயங்கரவாதிகள் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்படுவது ஐரோப்பா நாடுகள் அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரிட்டன் கனடா என்று எங்கெல்லாம் செல்ல பிள்ளைகளாக வளர்ந்தார்களோ? அங்கே வைத்து பயங்கரவாதிகள் மர்மமாக கொல்லப்படுவது எல்லாம் அவர்களை ஒரு அச்சத்தின் பிடியில் நிறுத்தி இருப்பதை நிரூபிக்கிறது .அந்த வகையில் கனடா குறிப்பிடுவது போல் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரணத்தின் பின்னணியில் இந்திய உணவுத்துறை இருக்குமானால் வல்லரசு நாடுகளின் இடையிலேயே புகுந்து தங்கள் தேசத்திற்கு எதிரான பயங்கரவாதிகளை வேட்டையாடுபவர்களுக்கு உள்நாட்டில் இருந்து கொண்டு தேசத்திற்கு எதிராக தேசிய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நம் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? என்ற அச்சம் வந்திருக்கக்கூடும் ‌. பகைநாட்டிலேயே இறங்கி பயங்கரவாதிகளை அவர்களது நாட்டு குடிமக்களை வைத்து முடிப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்து கொண்டு தேசத்தை துண்டு போட நினைக்கும் நம் மீது பார்வையை திருப்ப எவ்வளவு நேரம் ஆகும்? என்ற அச்சம் கூட அவர்களை மௌனிக்க வைத்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் கடந்த காலங்களில் ஒரு நாளும் பாரதத்தின் ஆட்சியாளர்களின் கருத்துக்களையோ ஆவணங்களையோ நம்பியது இல்லை. மாறாக பாரதத்தின் மீது குற்றம் சாட்டும் அல்லது பாரதத்திற்கு எதிராக காய் நகர்த்தும் நாடுகளின் கருத்துக்களுக்கும் ஆவணங்களுக்கும் தான் முன்னுரிமை கொடுப்பார்கள் . அந்த வகையில் அவர்கள் கனடாவின் கருத்திற்கு தான் வலு சேர்க்க வேண்டும். பாகிஸ்தானின் கருத்திற்கு தான் ஆதரவு தர வேண்டும். இந்த இரண்டின் அடிப்படையில் மோடி அரசின் மீது குற்றம் சாட்டி பாரதத்தின் உளவுத்துறை வெளியுறவுத்துறை இரண்டின் மீதும் மலிவான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் காக்கும் கனத்த அமைதி உண்மையில் என்ன நடந்திருக்கும்? என்பதை அவர்கள் யூகித்திருக்கலாம். அல்லது அவர்கள் கடந்த காலங்களில் முழுமையாக நம்பிய வல்லரசு நாடுகளின் மூலமே அவர்களுக்கு ஏதேனும் எச்சரிக்கைகள் சமிக்ஞைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் .

எது எப்படி இருந்தாலும் உலகம் முழுவதிலும் நிகழ்ந்து வரும் பயங்கரவாதிகளின் மர்மம் மரணம் உள்நாட்டில் இருக்கும் பிரிவினைவாதிகளையும் போராளிகளையும் தேசவிரோதிகளையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது என்பது உண்மை. இது உள்நாட்டில் மக்களிடம் தேசம் பாதுகாப்பாக இருப்பதையும் பாதுகாப்பான ஆட்சியை வழங்குபவர்களிடம் அதிகாரம் இருப்பதையும் உணரச் செய்யும். அது எல்லா வகையிலும் தேசத்திற்கு நன்மையை தரும் . அந்த வகையில் இந்த போராளிகளின் மௌனமும் அவர்களின் அச்சமும் இப்படியே தொடரட்டும். அதுவே தேசத்தின் மக்களுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் நலம் தரும் என்பதை அனைவரின் நம்பிக்கை.


Share it if you like it