சூடான் நாட்டில் இருந்து திரும்பிய தமிழர்கள், தி.மு.க.வுக்கு சாதகமாக பேசியதால், மிரட்டி பேச வைக்கப்பட்டார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் உள்நாட்டு போர் வெடித்திருக்கிறது. இதனால், மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பாரத பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை மேற்கொண்டார். இதனிடையே, முஸ்லீம்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரம்ஜான் பண்டிகை வந்தது. இதனால், இஸ்லாமிய நாடான சூடானில் மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில், 78 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வந்தது.
இவ்வாறு முதல்கட்டமாக மீட்கப்பட்டவர்களில் 9 தமிழர்களும் அடக்கம். இவர்கள் டெல்லியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். விமான நிலையங்களில் பேட்டியளித்த தமிழர்கள், ஏதோ தமிழக அரசே இவர்களை மீட்டுக்கொண்டு வந்ததுபோல், தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி என்று கூறினார்கள். அதாவது, தமிழக அதிகாரிகள் டெல்லியிலிருந்து அழைத்து வந்த நிலையில், சூடானில் இருந்தே அழைத்து வந்ததுபோல சீன் போட்டனர். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திராவிட மாடல் அரசுபோல் குறிப்பிட்டனர்.
ஆனால், இதே நபர்கள் டெல்லியில் பேட்டியளித்தபோது, சூடானில் சிக்கித் தவித்த எங்களை மத்திய அரசுதான் பாதுகாப்பாக அழைத்து வந்தது. ஆகவே, பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் நன்றி என்று மனதார வாழ்த்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இரு இடங்களிலும் இரு வேறு மாதிரியாக இவர்கள் பேசும் வீடியோகீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கில் இருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமாக பேசும்படி இவர்கள் மிரட்டப்பட்டார்களா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.