ஆப்பிரிக்க நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே கலவரம் வெடித்திருப்பதால், சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதில் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையேயான யுத்தம், தற்போது பெரும் கலவரமாக மாறி, சூடான் நாடே பூமியாக மாறி இருக்கிறது. இந்த கலவரத்தில் 1 இந்தியர் உட்பட மொத்தம் 56 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த இந்தியர், தால் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆல்பெர்ட் அகஸ்டின் என்பது தெரியவந்திருக்கிறது.
ஆகவே, இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறது. அப்பதிவில், “அறிவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்தியர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கவும். உடனடியாக வெளியில் செல்வதை நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து அமைதியாக இருங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.