குழந்தை கடத்தல் வழக்கில் சன் டிவி நிருபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக சமூகவலைதள வாசிகள் கருத்து தெரிவித்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிடர் கழகத் துணைத் தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியருமான கலி.பூங்குன்றனின் மருமகனாக இருப்பவர் குணசேகரன். இவர், தான் தற்பொழுது சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். குணசேகரன் பதவியேற்ற நாளில் இருந்தே, மத்திய அரசு, பிரதமர் மோடி, பா.ஜ.க. மற்றும் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விமர்சனம் செய்யும் வகையில் இருக்கும் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதுதவிர, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் பிரிவினைவாதிகள் செய்யும் தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்டாமல் அவர்களுக்கு முட்டு கொடுக்கும் பணியை மட்டுமே இன்று வரை அவர் செய்து வருகிறார் என்று பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்மை தன்மையை ஆராயாமல் உ.பி முதல்வர் யோகி அரசு குறித்து சன் டிவி செய்தி ஒன்றினை வெளியிட்டு இருந்தது. ஆனால், அது தவறான செய்தி என்பதை அறிந்த பின்பு உடனே அதனை நீக்கி இருக்கிறது. இதுதவிர, அதற்கு, ஒரு விளக்கம் கொடுத்தது தான் ஹைலைட்.

இப்படியாக, தனது மனம் போன போக்கில் பா.ஜ.க.வை சன் டிவி நிர்வாகம் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில் தான், ஆலங்குளம் சன் டிவி நிருபர் கார்த்திகேயன் என்பவர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவரோடு, சேர்த்து மொத்தும் 3 மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இச்சம்பவம் தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.