சேலம் சென்னை பயண தூரத்தை 3 மணி நேரமாக குறைக்க, புதிய விரைவு சாலை அமைக்கவுள்ளதாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கு, பூ உலகின் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு தான் தற்பொழுது நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்த சமயத்தில், சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பெரும் பயனளிக்கும், என்று பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால், இத்திட்டத்திற்கு அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதவிர, மாநிலம் முழுவதும் தி.மு.க கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அதிலும் குறிப்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலராக காட்டிக் கொள்ளும், பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன், மற்றும் பியூஸ் மானுஸ் போன்றவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, 8 வழிச்சாலை அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக, மத்திய அரசின் கடிதத்துக்காக காத்துக் கொண்டு, இருக்கிறோம் என்று சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், சேலம் – சென்னை பயண தூரத்தை 3 மணி நேரமாக குறைக்க புதிய விரைவு சாலை அமைக்கவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக, குரல் கொடுத்த சுந்தர்ராஜன் இன்று நடப்பது ஸ்டாலின் ஆட்சி என்பதால் தனது கடும் கண்டனத்தை, பதிவு செய்ய அச்சப்படுகிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.