மாணவி விவகாரம் : நீதிமன்ற தீர்ப்பிற்கு சுந்தர்ராஜன் கடும் எதிர்ப்பு..!

மாணவி விவகாரம் : நீதிமன்ற தீர்ப்பிற்கு சுந்தர்ராஜன் கடும் எதிர்ப்பு..!

Share it if you like it

மாணவி லாவண்யா மரணத்திற்கு, நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியான தீர்ப்பினை நேற்றைய தினம் வழங்கியது. இதற்கு பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாணவி லாவண்யா, கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றது.

லாவண்யா மரணத்திற்கு, இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சி தொண்டர்களுடன் அண்மையில், உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். நாடு முழுவதும் லாவண்யாவிற்கு நீதி கேட்டு ஆதரவு குரல் ஒலித்து வருகிறது. அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பினை நேற்றைய தினம் (1.1.2022) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கினார்.

நீதிபதியின் தீர்ப்பிற்கு மாணவியின் பெற்றோர் மற்றும் தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பிற்கு பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it