நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வழித்தடங்களை ஆக்கிரமித்து பணம் படைத்த முதலைகள் கட்டிய ரிசார்ட், லாட்ஜிகள், மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்தவர் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. இவரின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய அரசியல் புள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால், புதிய கலெக்டரை தி.மு.க அரசு நியமனம் செய்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் பூ உலகின் அமைப்பை சுந்தரராஜன் மற்றும் பியூஸ் மானுஸ் போனவர்கள் இதுநாள் வரை இன்னசென்ட் திவ்யா ஆதரவாக குரல் கொடுத்தார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அதனை தொடர்ந்து, நீலகிரியில் தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களை மறைத்து தனியார் விடுதிகளுக்கு சாலை அமைத்து வருவதாக பிரபல இணையதள ஊடகமான ஜீனியர் விகடன் சமீபத்தில் அதிர்ச்சிகரமான காணொளி ஒன்றினை வெளியிட்டது. சமூக ஆர்வலர்கள், வன விலங்குகளின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் இதே பியூஸ் மானுஸ், பூ உலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கப்சிப். இன்னசென்ட் திவ்யாவிற்கு ஆளும் கட்சியால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன்று வரை இவர்கள் வாய் திறக்கவில்லை என்பதே நிதர்சனம். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மட்டுமே நீலகிரி கலெக்டருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார். எதற்கும் குரல் கொடுக்காமல் கள்ள மெளனமாக இருந்து வந்த சுந்தர்ராஜன். தமிழக மக்களுக்கு அதிக பயன் அளிக்க கூடிய நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தம்மை கூறிக் கொள்ளும்


Share it if you like it