டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேட்டில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச்- 21 ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் பல முறை ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடினார். ஆனால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் வரும் ஜூன் 1 ம் தேதி வரை ஜாமினில் விட உத்தரவிட்டனர். டில்லியில் வரும் 25 ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அவர் லோக்சபா தேர்தல் பிராசரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும். ஜூன் 2ம் தேதி மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்.
மேலும், ஜாமீனுக்கு நிபந்தனைகள் விதித்து, கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி செயலகத்திற்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. இரண்டாவதாக, அவர் வழக்கில் தனது பங்கு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க கூடாது. மேலும் அவர் யாருடனும் வழக்கு தொடர்பாக சந்திக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளது.
யாரையும் சந்திக்க கூடாது,யாருடனும் பேசக்கூடாது, அலுவலகத்திற்கு போக கூடாது என்றால் பிரச்சாரம் மட்டும் எப்படி செய்ய முடியும். எதற்கு இந்த பெயில் கொடுக்க வேண்டும். `இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவாலை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.