சுதந்திர பிரிவினையில் இருந்து பாகிஸ்தான் காஷ்மீரை முன்வைத்து பாரதத்தின் மீது பலமுறை வன்மமாக போர் தொடுத்தது. ஆனால் அத்தனை போரிலும் தோல்வியை மட்டுமே தழுவியது. இதன் காரணமாக காஷ்மீரை உரிமை கொண்டாடி காஷ்மீர் மாநிலம் முழுவதிலும் பிரிவினைவாதிகளையும் பயங்கரவாதிகளையும் ஆதரித்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவோடு காஷ்மீரில் திரும்பிய பக்கமெல்லாம் வன்முறையும் இந்திய ராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் அரசு இயந்திரங்களுக்கும் எதிராக தொடர் பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறியது .
காஷ்மீர் மாநிலத்தில் இருந்த 370 வது பிரிவு சிறப்பு அந்தஸ்து நடைமுறையும் பாரதத்தின் பலவீனமான கடந்த கால வெளியுறவுத்துறை ராஜீய ரீதியான பின்னடைவுகள் கடந்த கால ஆட்சியாளர்களின் வாக்கு வங்கி அரசியல் பாகிஸ்தான் பாசம் எல்லாம் காஷ்மீரை அலட்சியமாக கையாள வைத்தது . அதன் பலன் காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு தேசத்தின் இறையாண்மை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் காஷ்மீர் மாநில காவல்துறை எல்லை பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என்று அனைவரும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே காஷ்மீரில் வாழ வேண்டிய துர்பாக்கியம். எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மீது கல் வீசி தாக்குதல் துப்பாக்கிச் சூடு தற்கொலை படை தாக்குதல் வெடிகுண்டு தாக்குதல் என்பதெல்லாம் தினசரி செய்திகளானது. காஷ்மீரின் எல்லை பகுதியில் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு என்பது சர்வசாதாரணமாக நிகழ்வாக மாறியது. இதன் காரணமாக பாரதத்தின் பாதுகாப்பு செலவுகளும் ராணுவ தரப்பில் உயிரிழப்பு பொருள் சேதம் என்று பொருளாதாரத்தின் பெரும் பங்கு இராணுவத்திற்கே திருப்பிவிடப்பட்டு உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு விஷயங்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது.
2014 ல் மோடி அரசு பதவியேற்ற பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆஜித்தோவல் ஐபிஎஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த காலங்களில் இந்திராவின் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அடிப்படையில் உளவுத்துறையில் நீண்ட அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டிருந்தவர். பல ஆண்டுகாலம் பாகிஸ்தானில் பதுங்கி இருந்து உளவு பணிகளை மேற்கொண்டவர் என்ற வகையில் இவரிடம் முழு நம்பிக்கையோடு மத்திய அரசு தேசப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை வழங்கியது. மறுபுறம் உலகம் முழுவதிலும் பயணித்து ராஜ்ய ரீதியாக பாரதத்தின் நியாயங்களை கடந்த கால இழப்புகளை ஒவ்வொரு தேசத்திற்கும் புரிய வைத்து அதன் மூலம் நட்பும் நல்லெண்ணமும் மட்டுமே வேண்டி இருக்கும் பாரதத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி தேசத்தின் இறையாண்மை பாதுகாக்கவும் நாட்டின் வளர்ச்சியை மக்களின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொள்வதற்கு மத்திய அரசு தயாரானது . அதற்கான அரசியல் நகர்வுகளையும் ராஜிய நகர்வுகளையும் இன் பாரத அரசு முன்னெடுப்பதை உணர்ந்து கொண்ட காஷ்மீரின் பிரிவினைவாதைகளும் பாகிஸ்தானின் உளவுத்துறையும் இதை எப்படி ஏதும் சீர்குலைக்க வேண்டும் ? என்ற திட்டமிட்டு களமிறங்கியது. பஞ்சாபின் எல்லைப் பகுதியில் பதான் கோட் பகுதியில் அமைந்திருந்த விமானப்படை விமானத்தளத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு குறிப்பிட்ட உயிர் சேதமும் தாக்குதலும் நடைபெற்றாலும் அவர்கள் திட்டமிட்ட பெரிய அளவிலான தாக்குதல் விமானப்படை விமான ம் ஓடுதளங்கள் என்று அத்தனையும் பாதுகாக்கப்பட்டு அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. எனினும் வன்மம் கொண்டு எந்நேரமும் பயங்கரவாதிகள் வேறு எங்கேனும் தாக்குதல் தொடுக்க கூடும் என்று எல்லைப்புற மாநிலங்கள் ராணுவ நிலைகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டே இருந்தது.
ஆனாலும் மாநில காவல்துறைக்கும் ராணுவத்திற்குமே பாதுகாப்பு இல்லாத நிலையில் இருந்த காஷ்மீர் மாநிலத்தில் முழுமையான பாதுகாப்பும் உளவு பணி ஒருங்கிணைப்பும் சவாலான விஷயமாக இருந்தது. மிக எளிதாக பயங்கரவாத தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக கூடிய காஷ்மீர் மாநிலத்தில் 2016 செப்டம்பர் மாதம் உரி பகுதியில் இருந்த ராணுவ நிலைகள் பயங்கரவாதிகளால் குறி வைக்கப்பட்டு பெரும் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. .இதில் 20க்கும் மேற்பட்ட பாரதத்தின் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயுதங்கள் தளவாடங்கள் அனைத்தும் தாக்குதலில் அழிந்தது.
தினமும் ராணுவத்தின் மீது கல்வீசி தாக்குதல் குண்டு வீசி தாக்குதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி நாள் துப்பாக்கிச் சூடு என்று ராணுவத்தில் உயிரிழப்பு என்பது சர்வ சாதாரணமாக இருந்த காலமது. 2014க்கு பிறகு மோடி அரசு பதவியேற்ற பிறகு தான் ராணுவத்தின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. கடந்த காலங்களை போல் அல்லாமல் பதில் தாக்குதல் நடத்துவதற்கு முழு அனுமதி இருந்தது. சூழ்நிலைகளை பொறுத்து பகை நாடுகள் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பொதுமக்கள் பொது சொத்துக்கள் பாதுகாப்பை நிலை நிறுத்தவும் நீங்களே முடிவெடுத்து களத்தில் இறங்கலாம் என்ற அனுமதியும் வழிகாட்டுதலும் ராணுவத்திற்கு தெளிவாக வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 2014க்கு பிறகு ராணுவத்தின் தரப்பில் உயிர் சேதம் நிகழும் பட்சத்தில் பதிலடியாக எதிர் தாக்குதலும் நிகழும் அதே நேரத்தில் பயங்கரவாதிகள் அவர்களின் ஆதரவாளர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக பாரதத்தின் மத்திய அரசு மீதும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி களத்தில் இறங்கும் இந்திய ராணுவம் உளவுத்துறை உள்ளிட்டவர்கள் மீதும் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ க்கும் பெரும் வன்மம் இருந்தது .அதை தீர்த்துக் கொள்ளும் விதமாக எங்கே அடித்தால் பாரதத்தின் மத்திய அரசுக்கு வலிக்கும் ? என்று திட்டமிட்டு களமிறங்கி நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீதும் பணி நிலைகளுக்கு திரும்பத் தயாராகிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களையும் குறிவைத்து பெரும் தாக்குதலை அரங்கேற்றியது. இந்நிகழ்வில் பலியான ராணுவ வீரர்கள் பலரும் இளம் வயது வீரர்கள் அதில் பலரும் நுண்ணறிவு பிரிவை சார்ந்தவர்கள்.
அதிநவீன தொழில்நுட்பங்கள் தளவாடங்களை கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர்கள். நேருக்கு நேராக அவர்கள் ஒவ்வொரு வீரரும் ஒரு நூறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆயிரம் பயங்கரவாதிகளுக்கு சமமானவர்கள் என்ற ரீதியில் இருந்த மாவீரர்கள். இனியும் சகோதர நாடு. அண்டை நாடு சாந்தி சமாதானம் என்று நாம் பயணிப்போம் ஆனால் நம்முடைய ராணுவ வீரர்களும் பொதுமக்களும் தேசத்தின் இறையாண்மையும் கேலிக்கூத்தாக மாறும் நிலை என்றும் மாறாது என்பதை உணர்ந்த பாரதம் பதிலடி தர தயாரானது. பாகிஸ்தானை அதற்குப் புரியும் மொழியிலேயே பதிலடி கொடுத்தால் மட்டுமே பாரதத்தின் வலி அதற்கு புரியும் என்ற ரீதியில் தெளிவான பதிலடிக்கு தயாரானது.