திருமதி சுஷ்மா ஸ்வராஜ் – பாரதத்தின் வெளியுறவுத் துறையின் வெற்றித்திருமகள்

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் – பாரதத்தின் வெளியுறவுத் துறையின் வெற்றித்திருமகள்

Share it if you like it

இடியாப்ப சிக்கலாய் இருந்த இந்திய வெளியுறவுத்துறையை மீட்டெடுத்து சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை நல்லெண்ணத்திற்கு பாத்திரமாக மாற்றி அமைத்து பாரதத்தின் வெளியுறவுத் துறையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற இந்திய வெளியுறவுத் துறையின் வீர திருமகள் [தெய்வத் திருமகள் ] திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் நினைவு நாளில் மறைந்தும் வாழும் அவரது சாதனைகளை தேசம் கண்ணீரோடு நினைவேந்துகிறது.

சுதந்திர இந்தியாவின் அரை நூற்றாண்டு காலம் இந்திய வெளியுறவுத்துறை தேச நலனை விட ஒரு குடும்பத்தின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டது. எந்த நாட்டிற்கு போனாலும் ஒன்று கடன் கேட்பார்கள். இல்லை ஊழல் சொத்துக்களை பதுக்குவதற்கு அனுமதி கேட்பார்கள் என்ற ரீதியில் சர்வதேச அளவில் ஏளனமும் அவமதிப்பையும் தான் கடந்த கால ஆட்சிகள் பாரதத்திற்கு சேர்த்து வைத்திருந்தது. நல்லாட்சி நாயகர் வாஜ்பாயின் காலத்தில் தான் கடந்த காலங்களில் கடந்த கால வெளியுறவு சீரழிவுகள் தெரிய வந்தது . ஆனால் அவற்றை முழுமையாக சீர்திருத்தம் செய்ய அவர்களுக்கு போதிய பலமும் ஒத்துழைப்பும் இல்லை. ஆனால் 2014 க்கு பிறகு நிலைமை மாறியது.

2014 மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியுறவு துறைக்கு பணியமர்த்தப்பட்ட திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாக்களை கொண்டு ஒரு வலுவான வெளியுறவுத் துறை குழுவை கட்டமைத்து அதன் மூலம் உலகம் முழுவதிலும் இந்திய தரப்பின் நிலைப்பாட்டையும் நல்லெண்ண அணுகு முறையையும் கொண்டு சேர்த்து சர்வதேச சமூகத்தை பாரதத்தின் பக்கம் திரும்பச் செய்தார். ஐந்தாண்டு காலம் முழுமையாக தனது உறக்கம் – ஆரோக்கியம் கூட மறந்து அயராது உழைத்த அவரது அர்ப்பணிப்பின் பலன் இன்று வரை இந்திய வெளியுறவுத் துறையை வெற்றிப் பாதையில் வழி நடத்திப் போகிறது.

எந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) காஷ்மீரை முன்னிறுத்தி பாரதத்திற்கு தினமும் கண்டனமும் அறிவுரையும் வழங்கி வந்ததோ அதே ஓபெக் கூட்டு கூட்டத்தில் சுஷ்மாஸ்வராஜை தலைமை தாங்க அழைத்து அவரை பேசவைக்கவும் அவரை எதிர்த்துப் பேச முயன்ற அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கண்டித்து அமர வைத்த காலத்தை உருவாக்கியவர் அவரே. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட போது அது பாரதத்தின் உள்நாட்டு விவகாரம் என்று ஒட்டுமொத்த அரபு தேசமும் அமைதி காத்தது. ஈரான் – துருக்கி என்று சிலர் வாலாட்டிய போதும் அதற்கு உண்டான பலனை கைமேல் வாங்கிக் கொண்டது.

ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்ட இந்திய செவிலியர்களை மீட்பதற்கு பல்வேறு தளங்களிலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் மூலமாக நேரடி நடவடிக்கையும் நிழல் உலக நடவடிக்கையும் எடுத்து அத்தனை பேரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தவர் . நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் கூட கவலை வேண்டாம். உங்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அத்தனை ஏற்பாடுகளையும் செய்யும். உங்களை பத்திரமாக அழைத்து வர இந்திய விமானப்படை வரும் என்று அவர் சாதாரணமாக வார்த்தைகளை உதிர்த்த போது உலகெங்கிலும் வாழ்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் மனதில் அவர் தாய்க்கும் மேலான பாதுகாப்பு தரும் பெரியம்மாவாக உயர்ந்து நின்றார்.

வெளிநாடுகளுக்கு வேலை தேடி போகும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இங்கு உள்ள ஏஜெண்டுகள் வரைமுறைகளை உறுதி செய்தது முதல் வெளிநாடுகளில் இந்திய தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் – பணி பாதுகாப்பு – குடிபுகல் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று அத்தனைக்கும் பம்பரமாக அவர் சுழன்றதும் அந்தந்த நாடுகளில் இருந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளை சுழல வைத்ததும் அவரின் மகத்தான சாதனை.போதிய அளவில் ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை ஒரே உத்தரவில் அவர்களை திரும்ப அழைத்து அந்த இடத்திற்கு சரியான நபர்களை பணியமர்த்தி சமரசம் இல்லாத இந்தியர்களின் பாதுகாப்பு ஒன்றே இந்திய வெளியுறவுத் துறையின் இலக்கு! என்று உலகிற்கு சொல்லாமல் சொல்லியவர்.

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக போகும் இந்திய பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணா கொடுமைகளை அறிந்தவர். வெளியுறவு அமைச்சராக அவர்களுக்கு உரிய நிவாரணம் – பாதுகாப்பு கிடைப்பதற்கு வழி செய்த போதிலும் என் வாழ்நாளில் இந்திய பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக போக வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை என்று வருமோ ? அதுவே நான் வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியதற்கு அர்த்தமான நாளாக வெற்றித் திருநாளாக இருக்கும் என்ற அவரது வார்த்தைகள் பாரதத்தின் பெண்மையும் தாய்மையும் எவ்வளவு மகத்தானது என்பதை உலகிற்கு உணர்த்தியது.

வெள்ளைத் தோல் அழகியை வெளியுறவுத் துறை அமைச்சராக்கி அவரின் மூலம் இந்தியர்களின் சபலத்தை உலகறிய செய்கிறோம் என்று சர்வதேச அரங்கில் பாரதத்தை அவமதித்து ரசித்த பகை நாட்டிற்கு பாரதத்தின் பெண்கள் அழகாயுதம் ஏந்துபவர்கள் அல்ல. அவர்கள் அறிவாயுதம் ஏந்துபவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகையும் சர்வதேச அரங்கில் பாரதத்தின் பக்கம் நிறுத்தியதில் அவர் சாதித்து காட்டினார். மோடி தினமும் ஊர் சுற்றுகிறார் . அவரோடு போட்டியிட்டு சுஷ்மாவும் ஒரு பக்கம் உற்சவம் போகிறார் என்று ஏளனம் பேசிய வாய்கள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் வல்லரசுகளின் யுத்தத்தை கூட நிறுத்தி வைத்து இந்தியர்களை மீட்கும் வல்லமையில் வெளியுறவுத் துறை உலகெங்கும் வெற்றி கொடி கட்டுகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியா குறிப்பிடுமானால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதி மட்டும் அல்ல. சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதியையும் சேர்த்தே குறிக்கும் . யுத்தம் என்று வந்தால் பாகிஸ்தானுக்கு ஒரு நிலை. சீனாவிற்கு ஒரு நிலை என்று இல்லை. பாகிஸ்தானும் சீனாவும் தனித்தனியாக வந்தாலும் சரி. இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் சரி. எதையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருக்கிறது. என்று நாடாளுமன்றத்தில் கர்ஜித்து சீனா ! சீனா ! என்ற காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணியின் மிரட்டல் அரசியலை நொறுக்கி போட்ட பெண் சிங்கம் அவர்.

சீனாவிடம் வல்லமையான ராணுவம் இருக்கலாம். ஆனால் தேசத்தை காப்பதில் வீர தீர துணிவிற்கு ஈடு இணையற்ற இந்திய ராணுவத்தின் முன் எத்தகைய இராணுவமும் எதிர்த்து நிற்க முடியாது . எங்கள் ராணுவத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சீனாவோடு யுத்தம் என்றாலும் எங்களுக்கு ஒன்றும் பயமில்லை. துணிவிருந்தால் அவர்களை களம் காணச் சொல்லுங்கள். துடைத்து தூசி தட்டி விட எங்களின் இந்திய ராணுவம் எப்போதும் தயார் ! என்று நாடாளுமன்றத்தில் அறைகூவல் விடுத்து சீனாவின் வல்லரசு பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தவர்.

ஆரோக்கிய குறைபாடு காரணமாக. 2019 தேர்தலில் போட்டியிடாமல் ஓய்வில் இருந்தவர். என் வாழ்நாளில் நான் காண்பேனோ ? என்று ஏங்கிய நாளை எனக்கு தந்திட்ட பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள் ! என்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு சமூக ஊடகம் வாயிலாக நன்றி தெரிவித்தவர். உடல்நல குறைபாடு காரணமாக மரணித்தவர். தன் வாழ்நாளில் சரப்ஜித் சிங்கை இழந்தது போல வேறொரு இழப்பை தேசம் கண்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக குல்பூஷன் ஜாதவ் வழக்கில் துரிதமான நடவடிக்கை எடுத்து சர்வதேச நீதிமன்றம் மூலமாக அவரது பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு மூலமாக உறுதி செய்த பாஞ்சால நாட்டு பெண் சிங்கம் அவர்.

இந்திய பெண்களை பாதுகாப்பற்ற அபலைகளாக கேட்பாரில்லாத அனாதைகளாக போக பொருட்களாக பயன்படுத்தி வந்த பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எச்சரிக்கை விடுத்து எங்களின் தேசத்தின் பெண்கள் எங்கள் தேசத்தின் தன்மானத்தின் அடையாளங்கள். அவர்கள் பொதுவெளிக்கு உழைக்கவும் உயரவும் சாதிக்கவும் வருகிறார்களேயன்றி அன்றி யாரிடமும் அகப்பட்டு சீரழிய வரவில்லை. இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடோ அத்துமீறலோ நேரிடும் எனில் அது எத்தகைய வல்லரசு தேசமாக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் அதற்கான விலையை தர வேண்டி இருக்கும். இந்திய வெளியுறவுத்துறை அதற்கான பதிலடி தர களத்தில் இறங்கும் என்று வெளிப்படையாக எச்சரித்து பாரதத்தின் பெண்களை உலகெங்கும் பாதுகாத்தவர்.

பெண்களை தாயாக தெய்வமாக பாவிக்கும் ஹிந்துஸ்தானத்தின் தர்மத்தின் வழியில் பண்பாடு கலாச்சாரத்தின் சின்னமாக உலக அரங்கில் மங்கல மங்கையாக வலம் வந்தவர். இன்று அவர் நம்மிடையே இல்லாமல் போனாலும் அவர் வார்த்தெடுத்த பல பொக்கிஷங்கள் இன்று பாரதத்தின் வெளியுறவுத் துறையிலும் தேசம் முழுவதிலும் அயலகத் துறையிலும் கோலோச்சி பாரதத்தின் வெளியுறவுத் துறையை தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க செய்கிறார்கள். அனைத்திற்கும் காரணம் அயலகத்துறையில் இராஜிய இராஜ மாதாவாக வலம் வந்த திருமதி சுஷ்மா ஸ்வராஜ் என்னும் அந்த வீர திருமகளே முதன்மை காரணம் என்ற நன்றி உணர்வோடும் கண்ணீரோடு அவரின் நினைவு நாளில் பாரதம் அவரை பெருமிதத்தோடு வணங்குகிறது.

எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கூட பகை நாட்டு குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவ விசா அனுமதியும் தேவையான உதவிகளை செய்த பாரத பெண்மையின் இலக்கணமான அந்த தெய்வ தாயின் புண்ணிய ஆன்மா நாராயணன் பாதங்களில் அமைதி காணட்டும்.


Share it if you like it