7,365 கி.மீ நடந்தே பாரதம் வந்த Switzerland துறவி..!

7,365 கி.மீ நடந்தே பாரதம் வந்த Switzerland துறவி..!

Share it if you like it

இயற்கை மருத்துவம், ஆன்மீகம், பக்தி, ஒழுக்கம், என உலகிற்கே இன்று இந்தியா வழிகாட்டி விளங்கி வருகிறது என்பது திண்ணம். பல புனிதமான மனிதர்களையும், மேன்மக்களையும், இவ்வுலகிற்கு வழங்கிய நாடு, நம் பாரத நாடு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர். கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. பல்வேறு நாடுகள், மலைகளை கடந்தும், இரவு நேரங்களில் காடுகள், ஆசிரமங்கள், மடங்கள், சாலையோரம், பள்ளிக்கூடங்களில், தனது இரவு பொழுதை கழித்தும். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நடை பயணமாகவே இந்தியா வந்து சேர்ந்து உள்ளார்.
ஹிந்தியில் மிகவும் சரளமாக பேசுகிறார் இந்த துறவி. மூன்று வருடம் ஹிந்தி புத்தகம் படித்தும். ஒரு வருடம் பாரத தேசத்தை சுற்றியும், ஹிந்தி மொழியில் மக்களிடம் உரையாடி தான் இந்தி மொழி கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.
இந்தியர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு. மேல் நாட்டு கலாச்சாரம் பணம், வசதி, ஆடம்பரத்தை போதிக்கிறது. அதன் மீது அதிக ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பாரத கலாச்சாரம் ஒப்பற்றது. அதை விட சிறந்தது எதுவுமே இல்லை. மனிதன் வாழ்வதற்கான மிக முக்கியமான சாஸ்திரம் இங்கு தான்  உள்ளது என்று அந்த துறவி குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
जय देवभूमि: स्विट्जरलैंड से पैदल उत्तराखंड पहुंचे बेन बाबा..6000 Km चले, 18 देश पार किए (Ben Baba arrives in Uttarakhand from Switzerland)
Who Is Ben Baba From Switzerland, An IT Professional Who Became A Hindu Sant - 99movies.icu
This Man Walked From Switzerland To India 😱 | Inspiring Video - YouTube

Share it if you like it