விமான நிலையத்தில் தான் அவமதிக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அண்மையில் ஓர் நாடகத்தை அரங்கேற்றினார். மக்கள் கனிமொழியை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பவே அதனை பற்றி இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறார். மக்களிடையே மொழி உணர்வை மீண்டும் தூண்டி விடும் விதமாக. டீ ஷர்ட் புரட்சியை கையில் எடுத்தார் கனிமொழி. ஆனால் அதுவும் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் டீ ஷர்ட் நாடகத்திற்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பதை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கறுப்பர் கூட்டம் விவகாரத்திற்குப் பின் மக்களுக்கு திமுக திக மீது உருவாகியுள்ள கோபத்தை எப்படியாது திசை திருப்ப முயல்கிறது திமுக. அதற்கு ஜெகத் கஸ்பர் போன்ற மதமாற்றும் கும்பலுடன் சேர்ந்து கனிமொழி போட்ட திட்டம் தான் இந்தி எதிர்ப்பு T-shirt நாடகம். ஆனால் மக்கள் முட்டாள் அல்ல.