பிராமண சமூக மக்களின் உணர்வுகளை புண்புடுத்தும் விதமாக கருத்து வெளியிட்ட தடா ரஹீமை தமிழக காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
பிரபல ஆபாச பேச்சாளரும் சவுக்கு சங்கரின் சிறை நண்பருமான தடா ரஹீம் இந்திய தேசிய லீக் கட்சி கட்சியின் தலைவர் ஆவார். இவர், மத்திய அரசு, பாரதப் பிரதமர் மோடி மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் திரை பிரபலங்களை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்ய கூடிய நபர். அதிலும் குறிப்பாக, பா.ஜ.க-விற்கு ஏதேனும் சினிமா நடிகை ஆதரவு தெரிவித்து விட்டால் அவர்களை அருவருக்கதக்க வகையில் மோசமாக விமர்சனம் செய்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்.
பிரபல இந்தி திரைப்பட நடிகை கங்கணா ரணாவத்தின் உயிருக்கு அச்சுறுத்தல், இருப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அவருக்கு Y பிரிவு பாதுகாப்பினை வழங்கியது. இதற்கு தடா ரஹீம் தெரிவித்த கருத்து என்னவெனில், விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பாஜக அரசு. என்று கருத்து தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்திற்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவை கமுக்கமாக நீக்கி இருந்தார். அந்த வகையில், தேச பக்தர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்ட நடிகை கஸ்தூரி சங்கர் தடா ரஹிமிற்கு தக்க பதிலடியை இவ்வாறு வழங்கி இருந்தார்.
ஒரு பெண் விபச்சாரியா இல்லையா என்று ஒரு ஆண் சந்தேகமற அறிவானென்றால் அது ஒன்று அவன் கஸ்டமராக அல்லது ப்ரோக்கராக இருந்தால் மட்டுமே. யாராக இருந்தாலும் அவர்களை அவதூறாக புறம் பேசுவது , பெண்களை கொச்சைப்படுத்துவது இவை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார் என்பது நபிகள் வாக்கு. என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தான், சங்கர மடம் முற்றுகை மற்றும் பூணுல் அறுக்கும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார். பிராமண சமூக மக்களின் உணர்வுகளை புண்புடுத்தும் விதமாக இவரின் கருத்து அமைந்துள்ளது என இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்து இருந்தனர். அதனை தொடர்ந்து தடா ரஹீம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாரதப் பிரதமரையும், தமிழக காவல்துறையையும் ஒருமையில் பேசிய சவுக்கு சங்கரை தடா ரஹீமிற்கு துணையாக அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.