ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து பேச வேண்டும் என தடா ரஹிம் தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர், மீது கடந்த 1991- ஆம் ஆண்டு மே 21- தேதி விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்திய மனித வெடிகுண்டு விபத்தில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில், 18 அப்பாவிகள் உடல் சிதறி பலியாகி இருந்தனர்.
அந்த கொடூர நிகழ்வில் இருந்து படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர் (ஓய்வு) காவல்துறை உயர் அதிகாரி அனுசுயா. இவர், ராஜீவ் காந்தியை கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்று வரை குரல் கொடுத்து வருகிறார். அந்தவகையில், விடுதலை செய்யப்பட்ட குற்றவாளியான பேரறிவாளனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டி பிடித்து வரவேற்ற சம்பவத்திற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்.

அந்தவகையில், பேசு தமிழா பேசு எனும் இணையதள ஊடகத்திற்கு சமீபத்தில் அனுசுயா அளித்த பேட்டியில் கூறியதாதவது; மேடைகளில் பேசும் பொழுது விடுதலை புலிகளை கொச்சையாக திட்டுகிறீர்கள் நளினியை கொச்சையாக விமர்சனம் செய்கிறீர்கள் ஏன்? அவ்வளவு கோவம் என தம்பி ஒருவர் கேள்வி ஒன்றினை அனுசயாவிடம் முன்வைக்கிறார். அதற்கு, உன் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை முடிந்தால் எனது போட்டியை போட்டால் போடு என கோபமாக கூறிக் கொண்டே எழுந்து செல்ல முற்படுகிறார். நளினி என்ன உன் அக்காவா? பிரதமரை கொன்றவள் தின்று விட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் என ஆவேசமாக கூறுவது போல அக்காணொளி அமைந்து இருந்தது.
இந்த நிலையில் தான், இந்திய தேசிய லீக் கட்சி கட்சியின் தலைவர் தடா ரஹிம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா இவீங்க போலீசா ? பொறுக்கியா ? நளினியை அவள் இவள் என்றும் பிரபாகரன் அவர்களை அவன் இவன் என்றும் பேசுகிறார். குற்றவாளியா இருந்தா கூட இப்படி எல்லாம் பேச கூடாது என காவல்துறை இவருக்கு பாடம் நடத்தவில்லையா இவருக்கு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மாண்புமிகு ஒசாமா பின்லேடன் அவர்களே, மதிப்பிற்குரிய தாவுத் இப்ராகிம் அவர்களே, கண்ணியத்திற்குரிய ஹபீஸ் சையத் அவர்களே என்று சர்வதேச பயங்கரவாதிகளை அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் வைப்பார் என தடாவை நெட்டிசன்கள் சாறு பிழிந்து வருகின்றனர்.