ரஷ்யா மற்றும் உக்ரைன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உலக பயங்ரவாதிகள் என்று அனைவராலும் அழைக்கப்படும் தாலிபான்கள் அறிவுரை வழங்கி இருப்பது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாகி கொண்டே செல்வதாக இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது வேதனைகளை பதிவு செய்துள்ளது. பசி, பட்டினி, வறுமை, பஞ்சம், என அந்நாடு கோர பிடியில் தற்பொழுது சிக்கியுள்ளது. அங்கு வாழும் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல், கடுமையான வரி, பெண் குழந்தைகள் கடத்தல், கள்ளதனமாக வெடி பொருட்களை உற்பத்தி செய்வது. அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வது என துளியும் மனிதாபிமான மற்ற முறையில் தாலிபான்கள் அந்நாட்டை சீரழித்து வருகின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் போர் தீவிரமாக நடைப்பெற்று வரும் இந்த நிலையில், இருநாடுகளும் அமைதியான வழியில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வினை காண வேண்டும் என தாலிபான்கள் அறிவுரை வழங்கி இருப்பதது தான் உலக நாடுகள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.