சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் கே.எஸ். அழகிரி திமீர் பேச்சு.
தமிழக காங்கிஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் சமீபத்தில் பிரபல இணையதள ஊடகமான சாணக்கியாவிற்கு பேட்டி அளித்தார். அப்பொழுது பா.ஜ.க-வை தோற்கடிக்க வேண்டும், சனாதன தர்மத்தை (ஹிந்து மதம்) அழிக்க வேண்டும் என்று மிகவும் ஆணவத்துடன் கூறியுள்ளார். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் வெளிப்படையாக தனது அழுக்கு எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தையோ, அல்லது இஸ்லாமிய மதத்தையோ அழிப்போம் என்று கூற துணிச்சல் உண்டா? வெறும் ஓட்டு அரசியலுக்காக ஹிந்துக்களை சீண்டி முஸ்லீம், கிறிஸ்தவ மக்களிடையே வாக்குகளை பெற முயல்வது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.