கடந்த ஐந்து வருடங்களில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தின் பங்கேற்பு 10-15.3 விழுக்காடு என்ற நிலையில், பீகாரை சேர்நதவர்களின் பங்கேற்பு 4-5.7 விழுக்காடு மட்டுமே. அதாவது பீகாரை விட மூன்று மடங்கு அதிக நிதி தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
இந்தியாவின் இமயமலை பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகவும், அதனால் நீர் பெருகி ஏரிகள் விரிவாக்கம் அடைவதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் அபாயம் நெருங்கி கொண்டே வருகிறது.
ஏப்ரல் 2024 ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூபாய். 2,27,535. ஏப்ரல் 2014 ல் 86,647.
பெங்களூருவில் 1 கோடிக்கும் அதிகமான தனியார் வாகனங்கள் உள்ள போதிலும், மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை வெறும் 6073 மட்டுமே.
இந்தியாவில் பாராளுமன்றத்தில் 14 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் உள்ளனர். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 20 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து வருடங்களில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தின் பங்கேற்பு 10-15.3 விழுக்காடு என்ற நிலையில், பீகாரை சேர்நதவர்களின் பங்கேற்பு 4-5.7 விழுக்காடு மட்டுமே. அதாவது பீகாரை விட மூன்று மடங்கு அதிக நிதி தமிழகத்திற்கு அளிக்கப்படுகிறது. கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலம் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.