பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதிஷ்டை செய்யும் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் !

பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதிஷ்டை செய்யும் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் !

Share it if you like it

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் என்பவர் தனது மனைவியுடன் பிரதிஷ்டை சடங்கு செய்ய உள்ளனர். அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைப்பெற்று கொண்டிருக்கிறது. பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலையின் கண் திறக்கப்பட்டது.

பிரதமர் மோடியுடன் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவுக்கு முன்னிலை வகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதிஷ்டை சடங்குகளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வெவ்வேறு சமுதாயங்களை சேர்ந்த 14 தம்பதிகள் மேற்கொள்ள உள்ளனர். தலித் முதல் பழங்குடியினர், ஓபிசி பிரிவுகளை சேர்ந்த தம்பதிகளும் இதில் அடங்குவர். இந்த தம்பதிகள் கோவிலில் பிரதிஷ்டை தின யாகம் செய்ய உள்ளனர். இதற்கான பட்டியலை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த ஆடலரசன் என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் தனது மனைவியுடன் பிரதிஷ்டை நிகழ்ச்சியை மேற்கொள்ள உள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது ஆடலரசன் தனது மனைவியுடன் பிரதிஷ்டை சடங்குகளை நடத்த உள்ளார். ஆடலரசன் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it