நம் கோவில்கள் பெரியளவில் சிதைக்கப்பட்டு வருவதாக யுனெஸ்கோ அமைப்பே கூறியுள்ளது. இந்த நிலையில் தான், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கோவில்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
பல்வேறு புனிதமான ஆலயங்கள் சிதிலமடைந்தும், மிகவும் மோசமான நிலையில் போதிய பராமரிப்பு இன்றி காட்சி அளிக்கும் சம்பவங்களை நம் கண்முன்னே நடைப்பெற்று கொண்டு இருக்கும் இந்த திராவிட ஆட்சியில் காணும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் 100-க்கும் மேற்பட்ட பாழடைந்த கோவில்களின் புகைப்படlதையும், காணொளியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார் (FreeTNTemples கோவில்அடிமைநிறுத்து). பல்வேறு துறை பிரபலங்கள் தங்கள் ஆதரவினை சத்குருவிற்கு தெரிவித்து இருந்தனர்.
“நான் ஆன்மீக யாத்திரைகளுக்கு சென்று வருகிறேன். நம் புனித ஸ்தலங்களில் நடக்கும் இதயமற்ற சுரண்டல்களை பார்த்து என் இதயம் ரத்தம் சிந்துகிறது. மற்ற வழிப்பாட்டு தலங்களை போல் நம் கோவில்களும் விடுதலை பெற வேண்டும். சத்குரு இதற்கு குரல் கொடுத்துள்ளார். நம் நம்பிக்கைகளை மீட்க நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்” என்று பிரபல நடிகை கஸ்தூரி குரல் கொடுத்து இருந்தார்.
“ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறும், மிகுந்த முக்கியத்துவமும் கொண்ட நம் கோவில்களின் தற்போதைய நிலையை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இது சரி செய்யப்படுவதோடு, முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க இதுவே சரியான தருணம் என்று ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் தனது பங்கிற்கு ஆதரவினை வழங்கி இருந்தார். (கோவில்அடிமைநிறுத்து) என்ற இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ, போராட்டம் செய்வதற்காகவோ தொடங்கப்படவில்லை. மேலும், யாரோ ஒரு தரப்பினரை தாக்கும் நோக்கத்திலும் இதை நாங்கள் தொடங்கப்படவில்லை. தொன்மையான நம் தமிழ்நாட்டு கோவில்களின் அவல நிலையை பார்த்து எங்களுக்குள் உருவான ஆழமான வலியையும் வேதனையும் வெளிப்படுத்துவதற்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
தமிழ் கலாச்சாரத்தின் இதயமாகவும், பக்தியின் மையமாகவும், கலைகள், மொழி போன்றவற்றின் பிறப்பிடமாகவும், விளங்கும் கோவில்கள் இப்படி அழிந்து வருவதை பார்க்கும் போது இதயம் வலி கொள்கிறது. ஆயிரக்கணக்கான கோவில்கள் எவ்வித பராமரிப்பும் இன்றி அழிந்து வருகின்றன. எனவே, இக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டிய தருணமிது. எந்த சமூகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் சொந்த வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு கோவில்களை அரசு பிடியில் இருந்து விடுவிப்போம் என்று குரல் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார் சத்குரு. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கோவில்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்த செய்தியினை ஓப் இந்தியா வெளியிட்டுள்ளது அதன் லிங்க் இதோ.
/https://www.opindia.com/2022/02/temples-govt-madras-hc-asks-quashes-fir-activist-full-details/