தமிழும் சமஸ்கிருதமும்
முன்னுரை:
உங்கள் பெயர் ‘சுகன்யா,’ ‘தீபா’ அல்லது ‘சோம சுந்தரம்’ என்றால் நீங்கள் சமஸ்கிருத பெயரை வைத்துள்ளீர்கள்.
நீங்கள் பாரதத்தின் எந்த மொழியை பேசினாலும், அதில் சமஸ்கிருதத்தை தவிர்க்க முடியாது. அனைத்து இந்திய மொழிகளிலும் பல சமஸ்கிருத மூலச் சொற்கள் பொதுவாகக் காணப் படும், இயல்பாகப் பயன்படுத்தப் படும். தமிழ் மொழியும் விதிவிலக்கல்ல.
சமஸ்கிருதமும் தமிழும் பரம்பொருளான மகாதேவனின் உடுக்கையிலிருந்து வந்த மொழிகளாகும். தமிழ் மொழி சமஸ்கிருதத்துடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியிலிருந்து சமஸ்கரித்ததை பிரிக்க முடியாது.
‘தமிழ்‘ தாய் மொழி என்றால், தமிழர்களின் தர்ம மொழி ‘சமஸ்கிருதம்‘:
தமிழ் சொற்களிலும் சமஸ்கிருத வேர் உள்ளன. இதை நிரூபிக்க சில எடுத்துக்காட்டுகள் மற்றும் விளக்கங்கள் இவ்வாறு:
- தமிழர்கள் வணங்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பகவத் கீதையை சமஸ்கிருதத்தில் வழங்கினார்.
- தமிழ் முனிவரான அகத்திய முனிவரின் மனைவி லோபாமுத்திரா (Lopamudra), வேதத்தில் உள்ள பத்து பாடல்களை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்.
- தாயையும் தந்தையையும் தனித்தனியாகப் பார்க்க முடியாதது போல, தாய்மொழி தமிழ் சிறந்ததா அல்லது தர்மத்தின் மொழி சமஸ்கிருதம் சிறந்ததா என்பதைப் பிரித்து எடைபோட முடியாது என்று நன்கு உணர்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர்கள்.
- சங்க இலக்கியங்களில் காணப்படும் சமஸ்கிருதச் சொற்கள் தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பைக் காட்டுகின்றன.
- ‘தமிழ் சங்கம்‘ என்பதிலேயே ‘சங்கம்‘ என்ற வார்த்தை ஒரு சமஸ்க்ரித வார்த்தையாகும்.
- ‘தொல்காப்பியம்‘ என்ற சொல் ‘தொல்’ + ‘காப்பியம்‘ ஆகிய இரண்டு சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது. ‘தொல்’ என்றால் ‘பழமையானது’ என்றும், ‘காபியம்’ என்ற சொல் ‘கவிதை’ என்று பொருள்படும் ‘காவ்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது.
- திருக்குறளிலும் பல சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன.
- திருக்குறளின் முதல் குறளிலேயே சமஸ்கிருத வார்த்தைகளான ‘அகர’ ‘ஆதி’ ‘பகவான்’ மற்றும் ‘உலகு’ ஆகிய வார்த்தைகள் உள்ளன.
- வேதத்திலும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்ற லங்கா நரேஷ் ராவணன் சமஸ்கிருதத்தில் ‘சிவ தாண்டவம்’ பாடினார்.
- தமிழ் முனிவர் கம்பர், 12 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதம் கற்று பின்னர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகியின் ராமாயணத்தை ‘கம்ப ராமாயணம்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ‘இராமாவதாரம்’ என்ற காவியமாக தமிழில் மொழிபெயர்த்தார்.
- சோழர் காலத்தின் திருவாலங்காட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட செப்புப் பட்டயத்தில் தமிழுடன் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்ட எழுத்துக்கள் இருந்தன.
- சனாதன தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி, தர்மத்தின் மொழியான சமஸ்கிருதத்தை ஒருபோதும் தனக்குப் போட்டியாகக் கருதாமல், தனது இணையான இரத்த உறவு சொந்தமாக கருதுகிறது என்று சொல்லலாம்.
தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் சமஸ்கிருத சொற்கள்:
தமிழ் மொழியில் பொதுவான, அன்றாட உரையாடல்கள் மற்றும் தகவல்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஏராளமான சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சொற்கள் மட்டுமே கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- அகங்காரம், அக்னி, அசுரர், அஞ்சலி, அட்சரம், அணு, அணியாயம், அபயம், அபராதம், அபாரம், அபூர்வம், அமிர்தம், அர்த்தம், அலங்காரம், ஆதி, அந்தம், ஆத்ம, ஆரம்பம், ஆலோசனை…
- இதயம், இலட்சியம், ஈசான, உதயம், உத்திகள், உபகாரம், உபயோகம், உபாயம், உற்சவம், உன்னதமான, உஷ்ணம், ஊர்ஜிதம், ஏகாந்தம்…
- கங்கணம், கடாக்ஷம், கனிதம், கபாலம், கம்பீரம், கரம், கருணை, காருண்யம், கருமம், கற்பம், கலசம், கவசம், கவிஞர், கௌரவம், கற்பூரம், கன்னி, கஷாயம், கிரகம், கிருபை, குணம், கும்பம், குமுதம், கோபுரம்…
- சக்தி, சங்கடம், சகுணம், சங்கீதம், சகலமும், சங்கு, சந்தனம், சந்தேகம், சபதம், சத்ரு, சப்தம், சமீப, சமுத்திரம், சமூகம், சம்பவம், சம்பிரதாயம், சரணம், சரித்திரம் சாகரம், சாட்சி, சாது, சாதுர்யம், சாபம், சாமர்த்தியம், சாமானியர், சாரம், சாயங்காலம், சித்திரம், சிந்தாமணி, சிம்ஹாசனம், சீக்கிரம், சுகந்தம், சுந்தரம், சுபம், ஸ்விகாரம், சூத்திரங்கள், சூரணம், சேவை…
- ஞானம், தண்டனை, தயவு, தரிசனம், தர்க்கம், தர்ப்பணம், தர்மம், தாளம், தானியம், தனுஷ், தாசி, தாது, தாம்புலம், தாரக, தானம், திசை, திரவியம், திராவிடம், தீபம், தீர்த்தம், தீவீரம், துக்கம், தூரம், தெய்வம், தேசம், தேவதை, தேஜஸ், தைரியம், தோரணம், தோசம், திவ்யம், துவஜம்…
- நகரம், நடனம், நட்சத்திரம், நமஸ்காரம், நயனம், நர, நரகம், நர்த்தனம், நவ, நவீனம், நாதம், நாயகன், நிதர்சனம், நித்திரை, நிதி, நீதி, நிபுணர், நிமிடம், நிரந்தரம், நிவர்த்தி, நிவாரணம், நீர், நீலம், நைவேத்தியம்…
- பகவான், பக்தி, பட்சி, பண்டிதர், பாதம், பதி, பத்தினி, பத்திரம், பத்திரிக்கை, பத்மம், பந்தம், பரம, பரம்பரை, பரஸ்பர, பராக்கிரமம், பரிகாசம், பரிசீலனை, பரிச்சயம், , பரிணாமபதம், பலாத்காரம், பலி, பவித்திரம், பவ்யம், பஜனை, பாக்யம், பாடம், பாயாசம், பாரம்பரியம், பாரம், பாராயணம், பாலகன், பாவம், பிச்சை, பித்தளை, பிரசன்ன, பரிணாமம், பலி, பவித்ரமான, பரிபூர்ணமான, பாக்கியம், பாதம், பிரபஞ்சம், பிரபு, பிறம்மை, பிரியம், பிரேத, பீடை, புத்தகம், புத்தி, புத்திர, புராணம், புருஷன், பூஜை, பேதம், போஷாக்கு, பிரேம் …
- மகிமை, மங்களம், மகுடம், மடம், மண்டபம், மதி, மத்திய, மந்திரம், மரணம், மாங்கல்யம், மாணிக்கம், மாதா, மார்க்கம், மீன், மானசீக, முக்தி, முனிவர், மூர்க்க, மூர்த்தி, மௌனம்…
- ரகசியம், ரசம், இரசாயனம், ராட்சகன், ரதம், ரதி, இரத்தம், ரம்யா, ராகம், ராசி, ராத்திரி, ராஜ்யம், ரிஷி, ரீதி, ரேகை…
- வக்கிர, வாசம், வசனம், வசீகர, வடிவம், வதம், வதனம், வம்சம், வரம், வர்க்க, வர்ணம், வர்ணனை, வாக்கியம், வாக்குவாதம், வாத்தியம், வாயு, விகார, விக்ரஹம், விசித்ர, விசுவாசம், விசேஷம், விபூதி, விமானம், வியாபாரம், விரோதம், விவாகம், வினோதம், விஜயம், வீரம், விஷம், வேதாளம், வேஷம், வைபவம், வைராக்யம் …
- லக்னம், லக்ஷணம், லட்சம், லவங்கம், லஜ்ஜை, லாபம், லாவண்யம், லீலை, லோபம், ஜலம், ஜெயந்தி, ஜாதி, ஜெபம், ஸ்தம்பித்து, ஸ்தாபித்து, சித்தி, ஸ்வரம், யதார்த்தம், யமன், யாத்திரை, யுவ, யோகம் …
முடிவுரை:
பாரதத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறது. இந்த அனைத்து மொழிகளும் அந்தந்த பகுதியின் பிராந்திய மொழி, அந்தந்த பகுதி மக்களின் தாய் மொழியாக இருக்கிறது. இந்த பாரதிய பிராந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியால் ஒரே சூத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சமஸ்கிருத மொழியே பாரத தேசத்தின் அடிப்படையான சனாதன தர்மத்தின் தேவ பாஷையாகும்.
அதாவது சமஸ்க்ரிதம் தமிழர்களின் தர்மத்தின் மொழியாகும். ஆக மொத்தத்தில் தாய் மொழி தமிழ் ஒரு கண் என்றால், தர்மத்தின் மொழி சமஸ்கிருதம் மற்றொரு கண்ணாகும்.
சங்க காலத்தில் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் இருந்ததால் தமிழுக்கு எந்த விதமான அச்சுறுத்து இருந்ததாக தமிழ்ச்சங்கங்கள் தெரிவிக்கவில்லை ஏனென்றால் அக்காலத்தில், தமிழ் தாய் மொழியாகவும் சமஸ்க்ரிதம் தர்மத்தின் மொழியாக இருப்பதில் தெளிவாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.
தாய்மொழி, தர்ம மொழி என்று பிளவு படுத்தாமல், நமது தர்மத்தின் மொழியான, இந்தப் பாரத மண்ணுக்குச் சொந்தமான சமஸ்கிருதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை.
- Dr. M. Vijaya