அம்பேத்காரை அவமதிக்கும் செயல்: தி.மு.க.வை சாடிய – தமிழருவி மணியன்!

அம்பேத்காரை அவமதிக்கும் செயல்: தி.மு.க.வை சாடிய – தமிழருவி மணியன்!

Share it if you like it

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. அமையும் என மூத்த அரசியல் தலைவர் தமிழருவி மணியன் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக இருப்பவர் தமிழருவி மணியன். இவர், கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;

திராவிட கட்சிகள் வெறுப்பு அரசியலை தமிழகத்தில் தொடர்ந்து வளர்த்து வளர்க்கின்றன. தேர்தல் நேரத்தில் பணத்தை கொடுத்து மக்களிடமிருந்து ஓட்டுகளை பெறுகின்றன. ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க., வாக்காளர்களுக்கு அளவுக்கு அதிகமாக பணத்தை கொடுத்து வெற்றி பெறும் முயற்சியில் இறங்கும். திராவிட கட்சிகளையும், ஒழித்து மாற்று அரசியலை உருவாக்க அனைத்து கட்சிகளும் அணி திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு’ என்ற பெயரை, ‘தமிழகம்’ என்று மாற்ற கவர்னர் சொல்லவில்லை. அண்ணாத்துரை காலத்தில் இருந்தே இன்று வரை தமிழக முதல்வர் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை, தி.மு.க., வேண்டும் என்றே அரசியலாக்குகிறது.

கவர்னர் என்பவர், மாநில ஆட்சி அதிகாரத்தின் தலைமகன். ஆட்சியில் இருப்பவர்கள் கவர்னருடன் இணக்கமாக செல்ல வேண்டும். இவர்கள், எழுதிக் கொடுத்ததை எல்லாம் சட்டசபையில் அப்படியே வாசிக்க, கவர்னர் ஒன்றும் கிளிப்பிள்ளை இல்லை. கவர்னர் அவசியமில்லை என .தி.மு.க. சொல்கிறது.

இது அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்காரை அவமதிக்கும் செயல் உலக அரங்கில் இந்தியா இன்று மதிப்பு மிக்க நாடாக இருக்கிறது என்றால், அதற்கு மோடியின் ஆட்சிதான் காரணம். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார்.


Share it if you like it