மேற்குவங்காளத்தில் ஆளுங்கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் வன்முறையை பற்றிய செய்திகளை தமிழக மக்கள் பார்வைக்கு எட்ட விடாமல் இருட்டடிப்பு செய்யும் தமிழக ஊடகங்களிடம் நியாயத்தை கேட்டு 20க்கும் மேற்பட்ட இணைய வழி செய்தி நிறுவனங்கள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Date : 09-05-2021
Chennai
To :
அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்
மேற்கு வங்கத் தேர்தலும், வன்முறைக் கொடூரமும்
தேர்தலும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். அதில் வெற்றி தோல்வி சகஜம். இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதும், தோல்வி அடைந்தவர்கள் அமைதி காப்பதும் அரசியலில் இயல்பாக இருந்து வருகிறது.
ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் வேறு மாதிரியாக இருக்கிறது. அங்கே சொல்ல முடியாதக் கொடுமைகள் நடந்தேறுகின்றன. கொலை, கொள்ளை, தீவைத்தல், பாலியல் வன்புணர்வு – என வன்முறை தலைவிரித்தாடுகிறது. எளிய அப்பாவி மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். சொந்த நாட்டில் அகதிகளாய் பக்கத்து மாநிலமான அஸ்ஸாம், திரிபுராவுக்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார்கள். இதுபோன்ற காட்சிகள் இந்தியப் பிரிவினையின் போதுதான் நடந்தது
இவ்விதமான காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களை நாகரீக சமுதாயம் எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்க வேண்டும். வெற்றி பெற்றவர் செய்யும் அராஜகங்களை பொது வெளியில் கொண்டுவர வேண்டும்.
இவற்றுக்கெதிராக கேள்வி கேட்கவும், உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு ஊடகங்களுக்கு பெருமளவு உண்டு. ஆனால் இந்த வன்முறை செயல்களை தமிழக அச்சு, காட்சி ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருகின்றன. இது வருத்தத்திற்குரியது.
நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒரு தனி நபர், ஒரு சிலரால் தாக்கப்பட்டால்கூட, இங்கு விவாதம் நடத்தக்கூடிய தமிழக காட்சி ஊடகங்கள், மேற்கு வங்க வன்முறைகளையும் அராஜகங்களையும் பகிரங்கப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த நியாயமற்ற மவுனம், நமது மனசாட்சியை உலுக்குகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸால், கட்டவிழ்த்து விடப்படும் கொடுரங்களுக்கு, ஊடகத் துறையைச் சேர்ந்த நாம் அனைவரும் நமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- Dravida MayaiSubbu (Writer, Senior Journalist)
- KolahalaSrenivaas (Writer, Senior Journalist)
- Aravinda Neelakandan (Writer, Senior Journalist)
- Mediyaan- www.mediyaan.com
- Vijayabharatham Nationalist Weekly – www.vijayabharatham.org
- KathirNews – www.kathir.news
- OreyNaadu Magazine – www.oreynaadu.com
- Thamarai- www.thamaraimedia.com
- Dhinasari- www.dhinasari.com
- News Guru- www.newsguru.news
- Tamilthamarai- www.tamilthamarai.com
- Swaraj Tamil- www.swarajtamil.com
- Avatar News- www.avatarnews.in
- Thecommunemag- www.thecommunemag.com
- Shree TV
- Enge Bharatham
- Sudesi Magazine
- Illayabharatham
- Kongu Nanbargan Sangam
- Nalayabaratham
- Hindu Murasu
- National Journalist Welfare Association
- Prakatanam
Contact us at: [email protected]