பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் எப்படி ரூ. 2,000 தாளை மாற்ற முடியும்?:   அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பிய இளம்பெண்!

பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் எப்படி ரூ. 2,000 தாளை மாற்ற முடியும்?: அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பிய இளம்பெண்!

Share it if you like it

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ. 2,000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ளலாம் என கூறியிருக்கிறது. மேலும், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதற்கு, செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. புழக்கத்தில், இருக்கும் அனைத்து ரூ. 2000 நோட்டுகளையும் அகற்ற முடிவு செய்துள்ளோம். ஆகவே, வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்திருந்தது.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், சாமானியர்கள் மற்றும் வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளன. எனினும், இதனை தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதே வேளையில், தி.மு.க.வின் கைக்கூலி ஊடகங்கள் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை மட்டம் தட்டும் பணியில் இறங்கியுள்ளன. அந்த வகையில், லிபர்டி தமிழ் எனும் யூ டியூப் சேனல் இளம் பெண் ஒருவரிடம் பேட்டி கண்டுள்ளது. அந்த, இளம் பெண் ரூ. 2,000 நோட்டு தொடர்பாக அறிவுபூர்மாக பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த இளம் பெண் நிச்சயம் சீப்பு செந்திலின் சகோதரியாகதான் இருக்க முடியும் என நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.


Share it if you like it