கர்நாடக முதல்வராகிறாரா அண்ணாமலை..?!

கர்நாடக முதல்வராகிறாரா அண்ணாமலை..?!

Share it if you like it

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவியேற்கப் போவதாக வெளியாகிவரும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றிவர் என்பதால், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கர்நாடக மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது. அதன்படி, அண்ணாமலையும் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு மாநிலத்தில் வசிக்கும் பா.ஜ.க. தொண்டர்கள் மட்டுமல்லாது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அமோக வரவேற்பு இருக்கிறது. ஆகவே, பெங்களூரு, ஷிவ்மோகா, பீதர், விஜயபுரா, மங்களூரு, சிக்மங்களூர் என மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழலில்தான், அண்ணாமலை குறித்த மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “பணி நிமித்தமாக பெங்களூர் செல்ல நேர்ந்தது… அங்குள்ள மக்கள், தலைவர் அண்ணாமலையை மிகப்பெரும் சக்தியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் தலைவர் அண்ணாமலை அவர்கள், முதல்வராக வாய்ப்பு அதிகம். தமிழக பா.ஜ.க.வும் தலைவர் அண்ணாமலை அவர்களை, முதல்வராக பார்க்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாநில முதல்வராக இருப்பது சாத்தியமா? சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அண்ணாமலை ஆதரவாளர்கள் சிலாகித்து வருவதோடு, அண்ணாமலைக்கு ஆதரவாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

Image

Share it if you like it