தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 323 இடங்களில் வெற்றிபெற்று, 3-வது பெரிய கட்சி என்கிற அந்தஸ்த்தை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் தாமரை மலராது என்று சவால் விட்டவர்களின் முகத்தில் கரியை பூசி, தாமரை மலர்ந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பாரத பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்தே பா.ஜ.க. மீதான வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன திராவிட இயக்கங்கள். குறிப்பாக, தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றி விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வந்தன. இதற்கு இங்குள்ள சில உ.பிஸ் அடிமை ஊடகங்களும் துணை போயின. மேலும், 200 ரூபாய் உ.பிஸ் கொத்தடிமைப் போராளிகளும் சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றினார்கள். ஒரு புறம், ‘தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. இது திராவிட மண். பெரியார் பூமி’ என்று தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கூப்பாடு போட, இன்னொருபுறம், ‘நோட்டாவுடன் போட்டி போடும் பா.ஜ.க., ஒத்த ஓட்டு பா.ஜ.க.’ என்றெல்லாம் தி.மு.க. ஆதரவு அல்லக்கைகளும் கேலி, கிண்டல் செய்து வந்தனர். மேலும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்யும் தவறுகலை தட்டிக் கேட்டால், ‘பா.ஜ.க. உள்ள வந்துரும், சும்மா இரு’ என்று கூறியே மக்களை ஏமாற்றி வந்தனர்.
எனினும், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தது. இதையடுத்து, திராவிடக் கட்சிகளுக்கு பா.ஜ.க. மீதான வெறுப்பு அதிகமானது. எனவே, அல்லக்கைகளை தட்டிவிட்டு பா.ஜ.க.வுக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டது தி.மு.க. அண்கோ. ஆனாலும், உ.பிஸ்களின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்து, கட்சிப் பாகுபாடின்றி ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதன் பிறகு, தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ச்சியடையத் துவங்கியது.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இளைஞர்கள் சுறுசுறுப்பாக களமிறங்கினர். பிப்ரவரி 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து, நேற்று (பிப்.22-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில்தான், பா.ஜ.க. பெரிய அளவில் மாஸ் காட்டி இருக்கிறது. அதாவது, மாநகராட்சி வார்டுகளில் 22 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. நகராட்சி வார்டுகளில் 59 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகளில் 242 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றிக் கனியை ருசித்தது. மொத்தத்தில் 323 இடங்களில் பா.ஜ.க. தனது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதுமே பரவலாக வெற்றிபெற்று முத்திரை பதித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் தாமரை மலர்ந்திருக்கிறது.

