‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: முதல்வருக்கு கோரிக்கை வைத்த செல்வபெருந்தகை!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: முதல்வருக்கு கோரிக்கை வைத்த செல்வபெருந்தகை!

Share it if you like it

நாடு முழுவதும் தற்பொழுது பெரும் தாக்கத்தை உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான செல்வ பெருந்தகை தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த சமயத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட, சிறுபான்மை மக்களை அம்மாநிலத்தை விட்டே விரட்டி அடித்தனர். உயிருக்கு அஞ்சி பலர் அடைக்கலம் தேடி, அண்டை மாநிலங்களுக்கு ஓடும் அவலநிலையை, அடிப்படைவாதிகள் ஏற்படுத்தி இருந்தனர். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசோ, அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இறுதி வரை பேசவில்லை என்பதே நிதர்சனம்.

காஷ்மீரில் சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள் மற்றும் பண்டிட்கள் என பலர் அடிப்படைவாதிகளால் அடித்து விரட்டப்பட்டனர். மேலும், மதம் மாற மறுத்த அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். விரட்டி அடிக்கப்பட்டவர்களின் வீடுகள், நிலங்கள் என அனைத்தையும் சூறையாடப்பட்டன. அப்பாவி பெண்கள், பெண் குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அந்த வகையில், காஷ்மீர் மக்கள் வடித்த ரத்த கண்ணீரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.

இத்திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரிவினைவாதிகள், இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே நம்பி இருக்கும், அரசியல்வாதிகள் என பலர் இத்திரைப்படத்திற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளளனர். இது தான், தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. ஈழத்தைவிட மோசமான இனப்படுகொலை காஷ்மீரில் நிகழ்ந்து உள்ளதை எடுத்துக்காட்டுகிறது, இந்த திரைப்படம் என பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அஸ்வத்தாமன் சமீபத்தில் கூறி இருந்தார்.

அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத மோதல்கள் உருவாகும் அபாயம் உள்ளது எனவே, முதல்வர் உடனடியாக, இவ்விஷயத்தில் தலையிட்டு அந்த படம் திரையிடுவதை தடை செய்ய வேண்டும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை எக்காலத்திலும் அனுமதிக்கக்கூடாது என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது தான், தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மக்களின் வலியை உணர்த்தும் இத்திரைப்படத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது, என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்து இருப்பதன் மூலம், அக்கட்சியின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it