தமிழகத்தில் உச்சத்தில் மதமாற்றம்… தோலுரித்துக் காட்டிய நியூஸ் 18!

தமிழகத்தில் உச்சத்தில் மதமாற்றம்… தோலுரித்துக் காட்டிய நியூஸ் 18!

Share it if you like it

தமிழகத்தில் எந்தளவுக்கு மதமாற்றம் நடக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறது சி.என்.என். நியூஸ் 18 தொலைக்காட்சி.

தமிழகத்தில் ஹிந்துக்கள் பெரிய அளவில் மத மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இந்த மத மாற்றம் அதிகளவில் இருக்கிறது. இதிலும், தென் தமிழகத்தில் மத மாற்றம் உச்சத்தில் இருந்து வருகிறது. கிறஸ்தவர்கள் ஒருபுறமும், இஸ்லாமியர்கள் மறுபுறமும் மத மாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிந்துக்கள் அதிகம் வசித்த கிராமங்கள் இன்று இஸ்லாமியர்களின் கோட்டையாகவும், கிறஸ்தவர்களின் கோட்டையாகவும் மாறி விட்டன. இஸ்லாமியர்களை பொறுத்தவரை இளைஞர்களையும், வாலிபர்களையும் குறிவைத்து மத மாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களோ பள்ளிகளிலேயே மத மாற்றத்தை தொடங்கி விடுகிறார்கள். இது சமயத்தில் சர்ச்சையாகி விடுவதும் உண்டு.

இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருக்க, சமீபத்தில் மத மாற்ற டார்ச்சரால் மாணவி லாவண்யா உயிரிழந்த விவகாரம்தான் வெளியுலகுக்குத் தெரியவந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா. இவரை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தி இருக்கிறது. மறுத்தவிட்டதால், அம்மாணவியை தோட்டவேலை, பாத்திரம் கழுவுவது, கழிப்பறைகளை கழுவுவது என டார்ச்சர் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த ஜனவரி மாதம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம், பாரத நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், கிறிஸ்தவ மிஷனரிகள் திருந்திய பாடில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை மத மாற்றம் செய்ய முயற்சித்ததாக தையல் ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை ஒருவர் மாணவிகளை மத மாற்ற முயல்வதாக புகார் எழுந்தது. இப்படி மதம் மாற்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து, மத மாற்ற விவகாரம் உண்மையா? என்பதை அறிய சி.என்.என். நியூஸ் 18 தொலைக்காட்சி நேரடியாகக் களத்தில் இறங்கியது. இதல்தான், தென் மாவட்டங்களில் பள்ளி மாணவ, மஆணவிகள் மற்றும் ஏழை மக்களை குறிவைத்து மதமாற்றம் உச்சத்தில் நடந்து வருவது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக, நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தியாளர் அன்வித் ஸ்ரீவத்ஸவா, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வில் ஈடுபட்டார். அங்கு, பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனிடம் பேட்டி எடுக்கிறார். அப்போது அந்த மாணவன், வாழ்க்கையில் உயர வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும். ஹிந்துவாக இருந்தால் ஏழையாகத்தான் இருப்பீர்கள். மேலும், படிப்பில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும். அப்படி மாறினால், உங்களது படிப்பு செலவு உட்பட அனைத்து செலவுகளை பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். அதேபோல, செல்போன், நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக அந்த மாணவன் கூறுகிறான்.

அதேபோல, அப்பகுதி மக்களிடம் நடத்திய சர்வேயில், பள்ளியில் குழந்தைக்கு அட்மிஷன் வேண்டுமா? ஆஸ்பத்திரியில் அட்மிஷன், நல்ல சிகிச்சை வேண்டுமா? உங்களுக்கு நல்ல வாழ்க்கை வேண்டுமா? கிறிஸ்தவ மதத்துக்கு மாறுங்கள் என்று ஆசைவார்த்தை கூறப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆக, மொத்தத்தில் தமிழகத்தில் மத மாற்றம் என்பது உச்சத்தில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனம். ஆகவே, ஹிந்துக்கள் விழித்துக் கொள்வதோடு, நாட்டில் மத மாற்ற தடைச் சட்டம் அவசியம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் ஹிந்து அமைப்புகள் மற்றும் ஹிந்துக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Share it if you like it