ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழக கார்டுதார்களேக்கே அதிக பயன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ’ஒரு நாடு ஒரு ரேஷன்’ அட்டைத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகள் வாயிலாக எந்த ஊரிலும் எந்தவொரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போதைய நிலையில் தாங்கள் வாழும் இடத்துக்கு அருகில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடையில் மட்டுமே மக்கள் பொருட்களை வாங்க முடியும். பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பைத் தேடி வரும் மக்களுக்கு உதவும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சில்லறை போராளிகள், அடிமை ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில்தான், ’ஒரேநாடு ஒரே ரேஷன்’ திட்டம் தமிழக கார்டுதார்களேக்கு அதிக பயன் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாரம்; தினமலர் பத்திரிகை செய்தி இதோ