ஈரோடு ராமசாமி கும்பல் அட்டூழியம்… கவர்னர் ரவியை இழிவுபடுத்தி குறும்படம்!

ஈரோடு ராமசாமி கும்பல் அட்டூழியம்… கவர்னர் ரவியை இழிவுபடுத்தி குறும்படம்!

Share it if you like it

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இழிவுபடுத்தி அர்பன் நக்கலைட்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதும், ஹிந்துக்களை நிந்திப்பதும், ஹிந்து தெய்வங்களை அவமானப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, திராவிடக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், இவ்வமைப்புகளின் துணை அமைப்புகளான கருப்பர் கூட்டம் உள்ளிட்ட நக்சலைட் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஒடிஸா போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதுபோல, தமிழகத்தில் பெரியாரிஸ்ட் தீவிரவாதிகள் செயல்பட்டுவருகிறார். இதற்கு திராவிட சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. தற்போது, தி.மு.க. ஆட்சியில் இருப்பதால் மேற்படி நாத்திக கும்பலின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ‘அர்பன் நக்கலைட்ஸ்’ என்கிற திராவிட நக்சலைட் அமைப்பு ‘ரவி ஊருக்கு புதுசு’ என்கிற தலைப்பில் ஹிந்து மதத்தையும், ஹிந்து மத சடங்குகளையும் இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக கவர்னர் ரவியை அவமானப்படுத்தும் வகையிலும் ஒரு குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த குறும்படத்தில் யுனைடட் இந்தியா மோட்டார்ஸ் என்கிற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பீப் பிரியாணி, சாம்பார் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகளை பகிர்ந்து சாப்பிடுவது போல காட்சி தொடங்குகிறது. பின்னர், அந்த அலுவலக உதவியாளர் நோட்டீஸ் போர்டில் ஒரு அறிவிப்பை ஒட்டுகிறார். அந்த அறிவிப்பு என்னவென்றால், மேற்படி நிறுவனத்துக்கு புதிதாக சூபர்வைசஸ் வருகிறார் என்பதுதான். அந்த சூபர்வைஸரின் பெயர் ரவி என்பதாக சித்தரிக்கப்படுகிறது. அதாவது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மையப்படுத்தி இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, சூபர்வைஸர் ரவி (கவர்னர் ரவி) அலுவலகத்தில் (தமிழகத்தில்) எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் என்பதுபோல, இவர்களாகவே காட்சிகளை அமைத்து, கவர்னர் ரவியை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை, கழிப்பறையை மையப்படுத்தி காட்சிப்படுத்தி மிகவும் கேவலமாக சித்தரித்திருக்கிறார்கள். அதோடு, ஹிந்துக்களின் யாகம், பூஜை போன்றவற்றை இழிவுபடுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். மேலும், நீட் தேர்வு மசோதாவுக்கு பதிலளிக்காமல் இருந்ததை மையப்படுத்தி, கவர்னரை அவமானப்படுத்துவது உட்பட, ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றை இழிவுபடுத்தி காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஈரோடு ராமசாமி படம் அலுவலகத்தில் இருப்பதுபோலவும், அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களை பார்த்த பிறகு வீரம் பொங்குவது போலவும், இறுதியில் அந்த அலுவலகத்தை விட்டே (தமிழகத்தை விட்டு) சூபர்வைஸர் ரவியை (கவர்னர் ரவியை) விரட்டுவதுபோல காட்சியுடன் அந்தக் குறும்படம் நிறைவடைகிறது.

இந்த குறும்படம்தான் ஹிந்துக்கள் மட்டுமல்லாது நடுநிலைவாதிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த குறும்படம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் கவர்னரை அவமானப்படுத்தும் வகையிலும் இருப்பதால், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இக்குறும்படத்தை தடை செய்ய வேண்டும். அதோடு, இக்குறும்படத்தை தயாரித்த குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இல்லாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி விடும். அது, இந்த தேச நலனுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்பதோடு, ஆத்திக மற்றும் நாத்திகவாதிகள் ஆகிய இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. தவிர, இந்தியா என்பது ஒரு ஒன்றியம் என்பது பிரிவினைவாதிகளின் கருத்தாக இருக்கிறது. இதற்கு, துணைவேந்தர்கள் மாநாட்டில் பதிலடி கொடுத்து பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, “இந்தியா என்பது அமெரிக்காவைப் போல ஒப்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்றியம் அல்ல. இந்திய ஒன்றியம் இயற்கையானது. கை, கால் என உறுப்புகளை ஒன்றியமாகக் கொண்ட உடலைப் போன்றது இந்தியா. உடல் உறுப்புகளின் அமைப்பும் செயல்பாடும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், உடல் ஒன்றுதான். இது ஒன்றியம், கூட்டாட்சி என்று கூறுபவர்களுக்கு புரிய வேண்டும்” என்று சவுக்கடி கொடுத்திருந்தார். இதனால், தி.மு.க. மற்றும் ஆதரவு கோஷ்டிகள் கவர்னர் ரவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தன. அதன் வெளிப்பாடாக இந்த குறும்படம் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இதில் தி.மு.க. தொடர்பு இருக்கலாம் என்பதுதான் அனைத்து தரப்பினரின் சந்தேகமும்.


Share it if you like it