ஏட்டு கையை முறுக்கி அடிக்கப் பாய்ந்த தி.மு.க. நிர்வாகி!

ஏட்டு கையை முறுக்கி அடிக்கப் பாய்ந்த தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

குடித்துக் கொண்டே காரை ஓட்டி வந்த தி.மு.க. பிரமுகர், தட்டக் கேட்ட போலீஸ் ஏட்டின் கையை முறுக்கி, அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பி.கே.ரவி. இவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரதாப்பின் உறவினர். தி.மு.க.வில் பொறுப்பில் இருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவர் வைத்ததுதான் சட்டம். போலீஸ் ஸ்டேஷன் முதல் சகல இடங்களில் இவரது கட்டப்பஞ்சாயத்து தூள் பறக்கும். தவிர, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுடன் நெருக்கமாக இருப்பதுபோல ஒரு போட்டோவை வைத்திருக்கிறார். ஆகவே, இதைக் காட்டி காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் போலீஸ் கான்ஸ்டபிள் வரை மிரட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். தவிர, போலீஸ் அதிகாரிகள் யாரையும் மதிப்பதில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில், அம்மாநிலத்திலிருந்து தமிழகத்தை நோக்கி வந்திருக்கிறார். மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே வந்தபோது, மது அருந்தியபடியே காரை ஓட்டி வந்திருக்கிறார். இதைப் பார்த்து, மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு கோகுல், காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. நிர்வாகி ரவி, காரிலிருந்து அவேசமாக இறங்கி, ஏட்டு கோகுலின் கையை பிடித்து முறுக்கி, அடிக்கப் பாய்ந்திருக்கிறார். மேலும், நான் ஆளும்கட்சிக்காரன். என்னையே நீ நிறுத்துகிறாயா, உன்னை என்ன செய்கிறேன் பார்? என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனால், பயந்துபோன ஏட்டு, தனது செல்போன் கேமரா மூலம், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது, ரவி எதற்கும் பயப்படாமல் தில்லாக யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கும் காட்சி அப்பட்டமாகப் பதிவாகி இருக்கிறது. மேலும், ரவி காரின் டிரைவர் சீட்டில் பீர் பாட்டில் பாதி குடித்த நிலையில் இருக்கிறது. தவிர, காரின் மற்றொரு இருக்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான மது பாட்டில்கள் கிடக்கின்றன. இதையடுத்து, மேற்கண்ட வீடியோவை ஏட்டு கோகுல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார். இந்தக் காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்துவிட்டு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், தமிழக காவல்துறை, முதல்வர் ஸ்டாலின் கைகளில்தான் இருக்கிறது. ஆனால், சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது, தி.மு.க. நிர்வாகி ஒருவர், போலீஸ் ஏட்டுவின் கையை முறுக்கி அடிக்கப் பாய்ந்திருக்கிறார். ஆகவே, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்கிற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்திருக்கிறது.


Share it if you like it