தமிழகத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, தலைநகரமான சென்னை கொலை நகரமாக மாறிவருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின்போது நடந்த கொலை சம்பவங்கள் கணக்கில் அடங்காதவை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஏராளமான ரவுடிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகு, தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் குறைந்தது.
இந்த நிலையில், தற்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையி்ல், ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. முன்விரோதம் காரணமாக, சென்னை மடிப்பாக்கத்தில் 188-வது வட்ட தி.மு.க. செயலாளர் செல்வம், கடந்த பிப்ரவரி மாதம் கூலிப்படை ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதேபோல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைத்தாக ஆத்திரத்தில் நெல்லையில் சொந்தக் கட்சி நிர்வாகியையே வெட்டிக் கொலை செய்தார்கள் தி.ம.க. குண்டர்கள். இவ்வாறு தமிழகம் முழுவதுமே கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பணக்குடியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கடந்த 7-ம் தேதி இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் போட வந்த ஒருவரை, ரவுடி கும்பல் ஒன்று அடித்தே கொலை செய்திருக்கிறது. இந்த சூழலில், சென்னை வில்லிவாக்கத்தில் ரவுடி கும்பல்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இன்று காலையில் டபுள் ரஞ்சித் என்கிற ரவுடியை இன்னொரு ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கிறது. இதுபோன்ற தொடர் கொலைகளால் தமிழக மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். ஆகவே, ரவுடிகளை ஒழித்து தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.