தமிழக மின்சார வாரியத்தின் அடேங்கப்பா ஊழல்: அமலாக்கத்துறை கிறுகிறு… ரூ.360 கோடி முடக்கம்!

தமிழக மின்சார வாரியத்தின் அடேங்கப்பா ஊழல்: அமலாக்கத்துறை கிறுகிறு… ரூ.360 கோடி முடக்கம்!

Share it if you like it

தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில், நிலக்கரி கொள்முதல் செய்ததில் அரசுக்கு 908 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியதாக, தமிழக மின்வாரிய அலுவலர்கள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்த விசாரணையில், 2011-ல் இருந்து 2016 வரை, விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ய சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) 1,267 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் செய்ததும், ஆனால் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் இறக்குமதி செய்த செலவில், போலியாக கணக்குக் காட்டி 239 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்து, மீதமுள்ள 908 கோடி ரூபாயை மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த ஊழலுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அப்போது பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றிருக்கும் 10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த 24-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் 360 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், சோதனையில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் வசமிருந்து 360 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத்தொகை தொடர்பான ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், அந்த வைப்பு நிதியை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it