மதுரையில் ஜூன் 4, 5 தேதிகளில் துறவியர் மாநாடு!

மதுரையில் ஜூன் 4, 5 தேதிகளில் துறவியர் மாநாடு!

Share it if you like it

தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் மதுரையில் ஜூன் 4, 5-ம் தேதிகளில் துறவியர் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாடு தொடர்பான வரவேற்புக் குழுக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. பின்னர், மாநாடு குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக இணைப் பொதுச்செயலாளர் கோ.ஸ்தானுமாலையன் கூறுகையில், “இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகளும், ஆன்மிக் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் ஹிந்து சமயம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, ஹிந்து தர்மம், வழிபாடு, கல்வி முறை, ஆலய பாதுகாப்பு, ஹிந்து பண்பாடு குறித்து விவாதிக்க உள்ளனர். அதேசமயம், இந்த மாநாடு அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் எந்தவொரு மதத்துக்கும் எதிரானது அல்ல. ஹிந்து சமூக பாதுகாப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. 2 நாள் மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விளக்கும் வகையில், ஜூன் 6-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும். மாநாட்டில் குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், நாடு முழுவதுமுள்ள மடாதிபதிகள், ராமர் ஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், மாநாட்டில் மதமாற்றம் செய்து கொண்டவர்கள் மீண்டும் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும். அரசின் கீழ் உள்ள கோயில்களில் சரிவர பூஜைகள் நடைபெறுவதில்லை, திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. கோயில் சொத்துக்கள் கைமாறி சென்று கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் சுடுகாடு, நீர்நிலைகள், கோயில்களில் உள்ள தீண்டாமை பிரச்னைகள், பசு, நீர்நிலைகள் புனிதம் காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பள்ளிகளில் சரிவர வழிகாட்டுதள் இல்லைததால், மாணவர்கள் மதுக்கடைகளில் நிற்பது, வகுப்பறையில் தாலி கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அவரவர் மதம் சார்ந்த கல்வியை அரசு போதிக்க வேண்டும். தவிர, இயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த உள்ளோம். மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் இரா.லட்சுமிபதி, பொதுச்செயலாளராக பி.எஸ்.நாகேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்” என்றார்.


Share it if you like it