பட்டினப்பிரவேசத்துக்கு தடை: வி.ஹெச்.பி. கண்டனம்!

பட்டினப்பிரவேசத்துக்கு தடை: வி.ஹெச்.பி. கண்டனம்!

Share it if you like it

தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச விழாவுக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு வி.ஹெச்.பி. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் கோ.தாணுமாலையன் வெளியிட்டிருக்கும் அறிக்கை:- “தமிழகத்தில் மிகவும் பழமையான ஆதீனம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் தருமபுர ஆதீனம். இதன் 27-வது ஞானபீடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவர், பல்வேறு ஆன்மிகப் பணிகள் மூலம் மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, தருமபுரத்தில் சுமார் 500 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விழா பட்டினப்பிரவேசம். இவ்விழாவானது ஆதீன சிஷ்யர்கள் குருமகா சன்னிதானத்தை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளச் செய்வார்கள். இது மரபுவழி ஆன்மிக திருவிழாவாகும். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த விழா நிகழாண்டு எதிர்வரும் மே 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் இந்த ஆன்மிக மரபுவழி திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக தடை விதித்திருக்கிறது தமிழக அரசு.

பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது பக்தர்களின் மனதை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் இருக்கக்கூடிய திருமடங்கள் ஆதீனங்களில் இதுபோன்று நடைபெற்று வரக்கூடிய பண்பாடு, கலாசாரம், மரபுவழி திருவிழாக்களை தடை செய்யும் சக்திகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த பட்டினப்பிரவேச விழா வெற்றியடைய அனைத்து ஹிந்து மக்களும், ஹிந்து இயக்கங்களும், விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்களும் பாடுபட வேண்டும். அதோடு, இந்த பட்டினப்பிரவேச ஆன்மிக நிகழ்விற்கு தமிழக அரசு தடை விதித்ததை நீக்கி, மரபுவழி விழா நடைபெற வழிவகை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it

2 thoughts on “பட்டினப்பிரவேசத்துக்கு தடை: வி.ஹெச்.பி. கண்டனம்!

  1. இந்துக்கள் அனைவரும் தருமபுரி ஆதினம் செல்ல வேண்டும்.

    தடை அகற்றப்படவில்லை என்றால் தடையை மீறி நடத்திக் காட்ட வேண்டும் அப்பொழுதுதான் இந்த அரசாங்கத்திற்கு புரியும் தமிழகத்தில் இந்துக்கள் தான் அதிகம் வாழ்கிறார்கள் அவர்களது மரபு வழிகளை தடை செய்யக்கூடாது என்று

  2. தர்ம மரபு வழி வந்த மரபை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. நம்முடைய உரிமையை பறிப்பதற்கும் விடமாட்டோம்.

Comments are closed.