கிருஷ்ணசாமியை அடிக்கப் பாய்ந்த தி.மு.க.வினர்… ஏன் தெரியுமா?!

கிருஷ்ணசாமியை அடிக்கப் பாய்ந்த தி.மு.க.வினர்… ஏன் தெரியுமா?!

Share it if you like it

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நடத்தி மக்கள் சபை நிகழ்ச்சியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத தி.மு.க.வினர் அவரை பேச விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம், ‘தமிழ்நாட்டுக்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா?’ என்கிற தலைப்பில் மக்கள் சபை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, இந்நிகழ்ச்சி சென்னை தியாகராயர் நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையிலுள்ள சர் பி.டி.தியாராயர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பா.ஜ.க.வைச் சேர்ந்த இராம.ஸ்ரீநிவாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர். நெறியாளராக அத்தொலைக்காட்சியின் பா.தமிழரசன் செயல்பட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “1968-ல் நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் அரைப்படி நெல் கேட்டதற்காக 43 தொழிலாளர்கள் ஒரே குடிசைக்குள் வைத்து கொளுத்தப்பட்டார்கள். இதை கண்டித்து அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது? 1978-ம் ஆண்டு விழுப்புரத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, தி.மு.க. என்ன செய்தது? 1995-ம் ஆண்டு கொடியங்குளத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. அப்போது தி.மு.க. என்ன செய்தது?” என்று பட்டியல் சமுதாயத்தினருக்கு எதிரான நிகழ்வுகளை குறிப்பிட்டுப் பேசியவர், “இதையெல்லாம் மறந்து இன்று நரிக்குறவர் வீட்டுக்குச் சென்று கட்டிப் பிடித்தால் எல்லாம் சரியாகி விடுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் சொல்ல திராணியற்ற, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த தி.மு.க.வினர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினார்கள். மேலும், மேடையை நோக்கி முன்னேறிச் சென்று கிருஷ்ணசாமியை தாக்குவதற்கும் முயற்சித்தார்கள். இதைக் கண்ட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தி.மு.க.வினரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதையடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே, திருமாவளவனும், எம்.எல்.ஏ. எழிலனும் தலையிட்டு, தி.மு.க.வினரை அமைதிப்படுத்தினர். இச்சம்பவத்தைப் பார்த்தவர்கள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட முயன்றது தவறு என்று குற்றம்சாட்டினார்கள். மேலும், இக்காணொளி சமூக வலைத்தளங்களிலும் வைரலானதால், இதைப் பார்க்கும் அனைவருமே தி.மு.க.வினரை வசைபாடி வருகின்றனர். இதிலிருந்தே தமிழ்நாட்டுக்குத் தேவை வன்முறையைத் தூண்டும் திராவிட மாடல் அல்ல, அமைதியை விரும்பும் தேசிய மாடல்தான் என்பது சொல்லாமல் சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள் தேசநல விரும்பிகள்.


Share it if you like it