தமிழகம் அமைதிப் பூங்காவா? கவர்னர் ‘பொளேர்’!

தமிழகம் அமைதிப் பூங்காவா? கவர்னர் ‘பொளேர்’!

Share it if you like it

கள்ளக்குறிச்சி கலவரம், கோவை குண்டு வெடிப்பு, வி.ஏ.ஓ. படுகொலை என பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடக்கும் தமிழகம் அமைதிப் பூங்காவா என்று கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி இருப்பது, தி.மு.க.வினரை குமுற வைத்திருக்கிறது.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பொதுவாக, ஒரு மாநில அரசு மக்களுக்கு செய்த மற்றும் செய்யவுள்ள வளர்ச்சித் திட்டங்கள், அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றை தொகுத்துத்தான் கவர்னர் உரையை தயாரிக்கும். அப்படித்தான் தயாரிக்கவும் வேண்டும். ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க. அரசு எனக்கு கொடுத்தது முழுக்க முழுக்க ஒரு பிரசார உரை. மேலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விஷயங்கள் பொய்யானவையாகவும், துல்லியமற்ற தரவுகளாகவும் இருந்தன.

உதாரணமாக, அந்த உரையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் தமிழகம் அப்படியா இருக்கிறது? ஆகவே, தமிழகத்தில் நடந்த சில சட்ட ஒழுங்கு பிரச்னைகளை நான் பட்டியலிட்டேன். குறிப்பாக, பி.எஃப்.ஐ. அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு நடந்த குண்டுவெடிப்புகள், கோவையில் நடந்த குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி கலவரம் ஆகியவற்றை நான் சுட்டிக் காட்டினேன். கவர்னர் என்கிற முறையில் தமிழக மக்களுக்கு நான் உண்மையை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

தமிழகம் அமைதிப் பூங்காவா என்று கவர்னர் கேள்வி எழுப்பி இருக்கும் இந்த விவகாரம்தான் தி.மு.க.வினரை குமுற வைத்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் கவர்னரை வசைபாடி வருகிறார்கள் உ.பி.ஸ்கள்.


Share it if you like it