தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

Share it if you like it

தமிழ்நாட்டில் 3,552 காவலர்களுக்கான நேரடித் தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. இப்பணிக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கான நேரடித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான பொதுத் தேர்வு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பம் துவங்கும் நாள்: 07.07.2022. கடைசி நாள் 15.08.2022. மேலும், இத்தேர்வு முதல்முறையாக தமிழ் மொழித் தகுதியின் அடிப்படையில் நடக்கவிருக்கிறது. தேர்வை முன்னிட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கட்டுப்பாட்டு அறையில் 07.07.2022 முதல் 15.08.2022 வரை வாரத்தின் ஏழு நாட்களும் “உதவி மையம்” செயல்படும். அதேபோல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் இந்த உதவி மையங்கள் அலுவலக பணி நேரத்தில் செயல்படும். இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்களுக்கு இந்த “உதவி மையத்தின்” சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தவிர, இந்த தேர்வுக்கான தகுதி அளவுகோல், தேர்வு செயல்முறை மற்றும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற கூடுதல் விவரங்கள் இவ்வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்புக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள்: 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899 மற்றும் 978903725 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது.


Share it if you like it