பவர் கட் பாடல் கேட்கலியோ… பவர் கட் பாடல்!

பவர் கட் பாடல் கேட்கலியோ… பவர் கட் பாடல்!

Share it if you like it

தமிழகத்தில் நிலவிவரும் மின்தடையை மையமாக வைத்து இணையத்தில் ஒரு பாடல் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே மின்தடையும் தொடங்கி விட்டது. கடந்த சில மாதங்களாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என இருந்து வந்த மின்தடை கடந்த சில வாரங்களாக 3 மணி நேரம் வரை நீடித்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வரை மின்தடை தொடர்ந்தது. இதனால், 2006 – 2011 தி.மு.க. ஆட்சியின் இருண்டகாலம் மீண்டும் தொடங்கி விட்டதோ என்று மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும், தொடர் மின்தடையில் தி.மு.க. அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

ஆனால் தி.மு.க.வோ, மின்தடைக்கு காரணம் நிலக்கரி பற்றாக்குறைதான். போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை. அதேபோல மத்திய அரசு தொகுப்பிலிருந்து வர வேண்டிய மின்சாரம் வரவில்லை என்று பொய் சொல்லி மக்களை திசை திருப்பி வருகிறது. எனினும், இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது வேறுகதை. காரணம், 2006 – 2011 தி.மு.க. ஆட்சியில் மின்வாரிய ஒப்பந்தங்களை கொடுத்திருந்த அதே பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கே தற்போது கான்ட்ராக்ட்களை கொடுத்திருக்கிறது தி.மு.க. அரசு. இந்த கம்பெனி நஷ்டத்தில் இயங்கிவரும் நிறுவனம் என்பதோடு, போதிய மேன் பவர் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் இல்லாத நிறுவனம் என்றும், இதனால் நிகழாண்டும் மின்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்ததுதான்.

இது ஒருபுறம் இருக்க, மின்தடைக்கு மத்திய அரசு மீது பழி போட்டு வரும் தி.மு.க.வை, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த சூழலில்தான், தி.மு.க. அரசின் மின்தடையை கிண்டல் செய்து இணையத்தில் ஒரு பாடல் உலா வந்து தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நடிகர் மம்முட்டி நடித்த அழகன் படத்தில் பானுபிரியாவுடன் போனில் பாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்… என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்” என்ற பாடல் வரிகளை, விடியல் ஸ்வரங்கள் என்ற தலைப்பில் “மினசாரத் தடைகள் இன்றும் இருக்கா இதே கணக்கா என்னவோ கெரக்கம்… என் வீட்டில் இருட்டு அங்கே இருட்டா இல்ல உருட்டா எனக்கும் கெரக்கம்…” என்று மாற்றி வெளியிட்டிருக்கிறார் ஒரு நெட்டிசன். இந்த பாடல் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it