இலவசத்தை நிறுத்து… விலையை குறை: மூதாட்டி ஆவேசம்!

இலவசத்தை நிறுத்து… விலையை குறை: மூதாட்டி ஆவேசம்!

Share it if you like it

இலவசத்தால் விலைவாசிதான் உயர்கின்றன. ஆகவே, இலவசவங்கள் வேண்டாம். விலையைக் குறையுங்கள் என்று மூதாட்டி ஒருவர் ஆவேசமாகப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை அறிவித்து திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. உதாரணமாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சியில், இலவச தொலைக்காட்சி வழங்கினார். அதேபோல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இலவச மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டன. இது ஒருபுறம் இருக்க, ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி மற்றும் கோதுமை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இலவசங்கள் மற்றும் மானிய விலையில் வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆகவே, பாரத பிரதமர் மோடி, இலவசத்தால்தான் நாடும், நாட்டு மக்களும் சீரழிகிறார்கள். ஆகவே, இலவசத்தை நிறுத்த வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும், இலவசங்களால்தான் விலைவாசியும் உயர்வதாக கூறிவருகிறார்.

இந்த சூழலில்தான், இலவசங்கள் வேண்டாம். விலையைக் குறையுங்கள் என்று ஒரு மூதாட்டி ஆவேசமாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த தனியார் யூடியூப் சேனல் ஒன்று, இலவசங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் பேட்டி கண்டது. அப்போது, ஒரு மூதாட்டி இலவசங்களே வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், “இலவசங்களால்தான் இதர பொருட்களின் விலைகள் உயர்கிறது. ஆகவே, எங்களுக்கு இலவச அரிசியும் வேண்டாம், கோதுமையும் வேண்டாம். அதேபோல, இலவச பஸ் பயணமும் வேண்டாம். மாறாக, மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும். கேஸ், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்க வேண்டும். இலவசம் என்ற பெயரில் எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றுகிறீர்கள். ஆகவே, இலவசத்தை நிறுத்தி விட்டு விலையை குறைக்க வேண்டும். இந்த ஆட்சியில் நடுத்தர மக்கள் கஷ்டப்படுகிறோமே தவிர, நன்றாக வாழவில்லை. மக்களுக்கு அந்த கஷ்டத்தைக் கொடுக்காதீர்கள். 10 ரூபாய் கொடுத்து எங்களால் பஸ்ஸில் போக முடியாதா? ஆகவே, இலவசத்தை நிறுத்தி விட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் நன்றாக இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it