மதமாற்ற விவகாரத்தில் மாணவி தற்கொலை: மூடிமறைக்கும் தி.மு.க.? அண்ணாமலை கண்டனம்

மதமாற்ற விவகாரத்தில் மாணவி தற்கொலை: மூடிமறைக்கும் தி.மு.க.? அண்ணாமலை கண்டனம்

Share it if you like it

மதம் மாறச் சொல்லி டார்ச்சர் செய்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதை மூடி மறைக்க தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முயற்சி செய்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய செய்திகள் வந்த வண்ணம் இருப்பதை ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக அனைவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த நிலையில்தான், 12-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் மதமாற்ற விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி முருகானந்தம் மகள் லாவண்யா. இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைகேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த லாவண்யாவை, அப்பள்ளியின் ஆசிரியர்கள் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள மாணவி மறுப்புத் தெரிவிக்கவே, அவரது பெற்றோரை வரவழைத்து ஆசைவார்த்தை கூறி மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். அதற்கு அவர்களும் மறுப்புத் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, லாவண்யாவை பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு அனுப்பாமல், பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்வது உட்பட பாத்திரம் கழுவுவதுவரை வேலை செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தி இருக்கிறது பள்ளி நிர்வாகம். இதனால், கடும் மன அழுத்தத்தில் இருந்த மாணவி லாவண்யா, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவி லாவண்யாவும் தனது மரண வாக்குமூலத்தில், தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார். இக்காணொளியை வடநாட்டைச் சேர்ந்த பிரபல ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஊடகங்கள் வழக்கம் போல மெளனம் காத்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, லாவண்யாவை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை என்று தஞ்சை எஸ்.பி. ரவளி பிரியா சொல்லி இருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது டுவிட்டர் பக்கத்தில் காவல்துறைக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கி வீடியோ ஆதாரம் உள்ளது. இது போலியானது என்ற முடிவுக்கு எஸ்பி. வந்தாரா? ஆம் எனில், எப்படி? தவிர, அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களும் தெளிவான அறிக்கையை அளித்துள்ளனர். அப்படி இருக்க, மாணவியின் பெற்றோரை எஸ்.பி. பொய்யர்கள் என்று குற்றம்சாட்டுகிறாரா? மிகவும் வருத்தம் மேடம்! என்று குறிப்பிட்டிருக்கிறார். பதில் சொல்லுங்க மேடம்.


Share it if you like it