ஹிந்து மாணவர் கொலை: ஃபைசுல் ஷமீர், சைபுதீன் கைது!

ஹிந்து மாணவர் கொலை: ஃபைசுல் ஷமீர், சைபுதீன் கைது!

Share it if you like it

ஜாதிக் கயிறு கட்டுவதில் ஏற்பட்ட மோதலில் ஹிந்து மாணவரை கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஃபைசுல் ஷமீர், சைபுதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து குண்டர்கள், ரவுடிகள் மட்டுமல்ல மாணவர்களின் அராஜகமும் அதிகரித்திருக்கிறது. சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த காலம்போய் பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் ராகிங் செய்யும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், பள்ளியில் மேஜை, நாற்காலிகளை உடைப்பது, ஆசிரியரை அடிக்கப் பாய்வது, தகாத வார்த்தைகளால் திட்டுவது, வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது டான்ஸ் ஆடுவது, மேஜையை தூக்கி ஆசிரியையை அடிக்கப் போவது, மாணவர்களுக்குள்ளேயே இரு கோஷ்டியாக மோதிக்கொள்வது என மாணவர்களின் அட்டூழியம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில்தான், சக மாணவரை கொலை செய்யும் அளவுக்கு எல்லைமீறிப் போயிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழை விவசாயி முருகன் – உச்சிமாகாளி தம்பதியின் மகன் செல்வசூர்யாதான் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர், இடைகாலை அடுத்த பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். பொதுவாக, தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை பள்ளி முதல் கல்லூரி மாணவர்கள்வரை ஜாதி அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் கையில் கலர் கலராக கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையல், செல்வசூர்யாவின் நண்பர்கள் சிலரும் கையில் ஜாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் கயிறு கட்டியிருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த 25-ம் தேதி  மதியம் சாப்பாட்டு இடைவேளை நேரத்தின்போது அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் சில மாணவர்கள், செல்வசூர்யாவின் நண்பர்கள் கையில் கயிறு கட்டியிருப்பது தொடர்பாக கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். இது வாக்குவாதமாக மாறி மோதல் ஏற்படும் சூழல் நிலவி இருக்கிறது. உடனே, செல்வசூர்யா தலையிட்டு இரு தரப்பினரையும் தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் பொதுக்குடி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் வந்திருக்கிறார்கள். இதில் இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, எதிர்தரப்பு மாணவர்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து செல்வசூர்யாவை தலையில் பலமாகத் தாக்கி இருக்கிறார்கள்.

இதில், பலத்த காயமடைந்த செல்வசூர்யாவுக்கு இடது பக்கக் காதில் இருந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மாணவர் செல்வசூர்யாவும் ரத்தக் காயத்துடன் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். மேலும், நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, மாணவர் செல்வசூர்யாவை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர், அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் செல்வசூர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாப்பாகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், செல்வசூர்யாவின் தாய் உச்சிமாகாளி அளித்த புகாரின் பேரில் பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே, சிகிச்சை பலனின்றி மாணவர் செல்வசூர்யா நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து மேற்படி வழக்கு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த பிளஸ் 1 மாணவர்கள் தலைமறைவாகி விட்டனர். எனினும், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுடலைமணி, ஃபைசுல் ஷமீர், சைபுதீன் ஆகிய 3 மாணவர்களையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதன் தொடர்ச்சியாக, ஜாதி ரீதியான மோதலை தடுக்க மாணவர்களுக்கிடையே போலீஸார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஜாதி அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் கயிறைகளை கட்டக்கூடாது எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

மக்கள் மைன்ட் வாய்ஸ்: தி.மு.க. ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் அரங்கேறப் போகிறதோ?


Share it if you like it

One thought on “ஹிந்து மாணவர் கொலை: ஃபைசுல் ஷமீர், சைபுதீன் கைது!

  1. திமுக ஆட்சியில் உண்மையிலேயே இன்னும் என்னென்ன கொடுமைகள் நிகழப் போகின்றது என்று தெரியவில்லை ஆண்டவா என் இந்து மக்களை காப்பாற்று

Comments are closed.