தேர்தல் ஆணையத்தை தெறிக்கவிட்ட போன் கால்கள்!

தேர்தல் ஆணையத்தை தெறிக்கவிட்ட போன் கால்கள்!

Share it if you like it

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் பணமும், பரிசுப் பொருட்களும் வாக்காளர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும், தேர்தல் கமிஷனுக்கு போன் மேல் போன் போட்டு தெறிக்க விட்டதுதான் ஹைலைட்!

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேரதல், தி.மு.க. தொடுத்த வழக்கால் நின்றுபோனது. இதன் பிறகு, கோர்ட் உத்தரவுப்படி, 2019-ம் ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதுவும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதியுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. பின்னர், கடந்தாண்டு மீதமுள்ள 9 மாவட்டங்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமானது. அதன்படி, ஜனவரி மாதம் இறுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, இன்று தேர்தல் நடந்து வருகிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம் 17-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அன்றையதினம் இரவு முதல் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா தொடங்கி விட்டது. தி.மு.க.வும், அ.தி.மு..க.வும் போட்டி போட்டுக் கொண்டு பரிசு மழை பொழிந்தன.

வேட்பாளர்கள் தங்களது வசதிக்கேற்ப 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை பணமாக வழங்கினார்கள். சில இடங்களில் பணத்துக்கு பதிலாக வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ், வெள்ளி குங்குமச்சிமிழ், அரசி, பருப்பு உள்ளிட்ட ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்னும் சில இடங்களில் பரிசுப் பொருட்களுடன் சேர்த்து 1,000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. இப்படி வாக்காளர்களை கவர்வதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி பணமும் பரிசும் வழங்கியதால், இதர கட்சிகள் கடும் அதிருப்தியும், ஆத்தரமும் அடைந்தன. எனவே, பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த நம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அதேபோல, சில நேர்மையான சமூக ஆர்வலர்களும் தேர்தல் கமிஷனுக்கு போன் போட்டு புகார் தெரிவித்தனர். இதனால், தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த புகார் தெரிவிக்கும் எண் பிசியாகவே இருந்தது. மேலும், போன் மேல் போன் வந்ததால், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் திக்குமுக்காடிப் போயினர்.


Share it if you like it