காவி வேட்டி, துண்டு அணிய பூசாரிகளுக்கு தடை!

காவி வேட்டி, துண்டு அணிய பூசாரிகளுக்கு தடை!

Share it if you like it

கிராம கோயில் பூசாரிகளை காவி வேட்டி, துண்டு அணியக் கூடாது என்று தடை விதித்த விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்திலுள்ள கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணி நடத்த திமுக தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி 2,500 கிராமப்புற கோயில்களுக்கு பிரித்து வழங்கப்படவிருக்கிறது. இதற்கான நிதி வழங்கும் விழா சென்னை வில்லிவாகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதுமிருந்து கிராம கோயில்களைச் சேர்ந்த சுமார் 5,000 பூசாரிகளும், 1,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர்.

இந்த சூழலில்தான், விழாவுக்கு வரும் கிராம பூசாரிகள் யாரும் காவி நிற வேட்டி, துண்டு அணிந்துவரக் கூடாது என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், காவி உடை அணிந்து வந்தால் விழாவில் அனுமதி மறுக்கப்படும். அதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள். இதனால், அனைத்து பூசாரிகளும் வெள்ளை வேட்டி, துண்டு அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கிராமப்புற கோயில்களைச் சேர்ந்த பூசாரிகள். இவர்களில் பாதிபேர் ஆதி திராவிடர்கள். இவர்கள் அனைவருமே காலம்காலமாக காவி வேட்டி, துண்டு அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் காவி உடை அணிய அதிகாரிகள் தடை போட்டது அனைவரையும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது.

இதுகுறித்து அதிகாரிடம் கேட்டபோது, முதல்வருக்கு காவி உடை அணிவது பிடிக்காது. ஆகவே, காவி உடையை தவிர்க்கும்படி கிராமப்புற கோயில் பூசாரிகளிடம் அறிவுறுத்தி இருந்தோம் என்று கூலாக கூறினார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது பரவலான கருத்தாக இருந்து வருகிறது. இந்த சூழலில், பூசாரிகளையே காவி உடை அணியக் கூடாது என்று தங்களது வன்மத்தை காட்டி இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it