கார்ப்பரேட்டுக்கு வரிக் குறைப்பா? தேச விரோதிகளின் பித்தலாட்டம்!

கார்ப்பரேட்டுக்கு வரிக் குறைப்பா? தேச விரோதிகளின் பித்தலாட்டம்!

Share it if you like it

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கார்ப்பரேட்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு அல்ல என்று கூக்குரலிடுவது தேச விரோதிகளின் வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், தற்போது கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்து, சாமானிய மக்கள் வாங்கும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி விட்டதாக திட்டமிட்டு பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் தேச விரோதிகளும், அந்நியக் கைக்கூலிகளும், நாலாந்தர ஊடகங்களும். இப்படித்தான் மத்திய பட்ஜெட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரியை 7 சதவிகிதமாகக் குறைத்ததை, கார்ப்பரேட்களுக்கான வரியை குறைத்து விட்டதாக பித்தலாட்டம் செய்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்களது குட்டு உடைந்து, உண்மை நிலவரம் மக்களுக்குத் தெரிந்து விட்டது. இதையடுத்து, தற்போது கார்ப்பரேட்களுக்கான கம்பெனி வரியை குறைத்து விட்டதாக மற்றொரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் கார்ப்பரேட்களுக்கான வரி குறைக்கப்பட்டிருக்கிறதா? இதோ புள்ளி விவரம்…

2014-ம் ஆண்டுக்கு முன்புவரை, அதாவது, பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கம்பெனி வரி 33.6 சதவிகிதம். ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது கார்ப்பரேட்களின் கம்பெனி வரி 35 சதவிகிதம். அதேபோல, கார்ப்பரேட்டுகள் கட்டிய வரி போக மீதமிருக்கும் லாபமான டிவிடென்ட்டுக்கு கட்டிய வரி 18.5 சதவிகிதம். தற்போது அந்த வரி 42 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை கார்ப்பரேட்களின் கம்பெனி பிளஸ் டிவிடென்ட் ஆகிய இரண்டுக்குமான வரி 50 சதவிகிதம் மட்டுமே. ஆனால், தற்போது இரண்டுக்குமான வரி 77 சதவிகிதம். இது தவிர, 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கம்பெனி ஷேர்களை விற்பனை செய்தால் மத்திய அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், தற்போது 12.5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தத்தில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட்களுக்கான வரி உயர்த்தப்பட்டிருக்கிறதே தவிர, குறைக்கப்படவே இல்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்களுக்கான அரசு என தேச விரோதிகள் கட்டவிழ்த்து விடும் கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று பதிலடி கொடுக்கிறார்கள் தேச பக்தர்கள்.


Share it if you like it