பர்தா பரபரப்பு அடங்குவதற்குள், கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆம், வகுப்பறையில் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் தொழுகையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சில மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தின் சட்ட, திட்டங்களுக்கு உட்படாமல் பர்தா அணிந்து வந்துள்ளனர். இதையடுத்து, ஹிந்து மாணவ, மாணவர்கள் பதிலுக்கு காவி நிறத்தில் உடை அணிந்து வந்து பதிலுக்கு களத்தில் இறங்கிய சம்பவம் பேசு பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிக்கு சீருடைதான் அணிந்து வரவேண்டும் என்று கூறி, மற்ற உடைகளுக்கு தடைவித்தது மாநில அரசு.
இதை கண்டித்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தூண்டுதலின் பெயரில் சிலர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். காங்கிரஸ், தி.மு.க., வி.சி.க. போன்ற கட்சிகள் இச்சம்பவத்தை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தற்பொழுது இச்சம்பவத்தின் தாக்கம் மெல்ல, மெல்ல தணிந்து வரும் சூழலில், அதே கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் தொழுகை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளி கே.எஸ்.ஆர். எனப்படும் கிராந்தி சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 5-ல் உள்ள போர்ட்டர்களின் ஓய்வறையை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சட்டவிரோதமாக மசூதியாக மாற்றி இருந்தனர். இக்காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.