தெலுங்கானா முதல்வர் இயற்கை சீற்றம் குறித்து தெரிவித்து இருக்கும் கருத்து இந்தியா முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கின்றன.
தெலுங்கானா முதல்வராக இருப்பவர் சந்திர சேகர் ராவ். இவர், தமிழக முதல்வரின் மிக நெருங்கிய நண்பர். மேலும், ஸ்டாலின் போன்று இவரும் பிரதமர் கனவில் இருப்பவர். தமிழகத்தில் எப்படி குடும்ப ஆட்சியோ? அதே போன்று தெலுங்கானாவிலும் குடும்ப ஆட்சி என, இரு முதல்வர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன.
இதனிடையே, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து இருக்கின்றன. அந்த வகையில், தொடர் மழையின் காரணமாக, கோதாவரி ஆற்றின் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனை தொடர்ந்து, முதல்வர் சந்திர சேகர் ராவ் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது, பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது அவர் கூறியதாவது; இந்த மேக வெடிப்பு என்பது புது நிகழ்வாக உள்ளது, பெரு மழை பிற நாடுகளின் சதியாக இருக்கலாம் என எங்களுக்கு செய்தி வருகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
மழை என்பது இறைவன் கொடுத்த வரம். இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மை காக்கும், என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை, அனைவரும் நன்கு உணர்ந்து உள்ளனர். ஆனால், பெரு மழை பிற நாடுகளின் சதியாக இருக்கலாம் என தெலுங்கானா முதல்வர் கூறியது தான் நகைச்சுவையின் உச்சம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பதநீரில் சர்க்கரை போட்டு இருக்கா, என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதை காட்டிலும் அவரது நண்பர் தெரிவித்த கருத்து தான் ’ஹைலைட்’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.