அரசு நிலத்தில் கோவில் வரக்கூடாது என்றால் கோவில் நிலத்திற்கு அரசு ஏன் வருகிறது ?

அரசு நிலத்தில் கோவில் வரக்கூடாது என்றால் கோவில் நிலத்திற்கு அரசு ஏன் வருகிறது ?

Share it if you like it

தமிழகத்தில் உள்ள ஹிந்து ஆலயங்களின் நிலைமை நாளுக்கு நாள் தமிகத்தில் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தமிழக ஆலயங்களின் நிலைமை தற்பொழுது எவ்வாறு உள்ளது என அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.

  • ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
  • 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
  • 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
  • பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அரசு நிலத்தில் கோவில் வரக்கூடாது என்றால் கோவில் நிலத்திற்கு அரசு ஏன்? வருகிறது ? என்று பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Image


Share it if you like it