அழிவின் விளிம்பில் தமிழகத்தின் ஆலயங்கள் !

அழிவின் விளிம்பில் தமிழகத்தின் ஆலயங்கள் !

Share it if you like it

ஆன்மீக பூமியான தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஆலயமே நிறைந்திருக்கும். வானளாவிய கோபுரங்கள் கண்களை அகல வைக்கும் உயர்ந்த மதில் சுவர்கள் கோட்டை கொத்தளம் போன்ற பரந்துபட்ட பிரகாரங்கள் நுட்பமான கலை இலக்கியம் ஓவியம் சிற்பக் கலைகள் சூழ்ந்த கட்டிடக்கலை என்று இங்குள்ள ஒவ்வொரு ஆலயமும் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். இந்த ஆலயங்கள் வெறும் ஆன்மீகத்தின் உறைவிடங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை பொருளாதார சூழலியல் சங்கிலிகளாக செயல்படுபவை. கலை இலக்கியம் கலாச்சாரம் பண்பாடு ஆன்மீகம் கல்வி மருத்துவம் போர்க்களை அனைத்திற்கும் ஆன பொதுவான மைய புள்ளியாக செயல்பட்டவை. இயற்கை பேரிடர் யுத்த காலங்களில் மக்களுக்கும் அரசு குடும்பங்களுக்கும் பாதுகாப்பான அரணாக இருந்தவை . இங்குள்ள ஒவ்வொரு ஆலயமும் நம் முன்னோர்களின் வாழ்வியலையும் அவர்களின் வாழ்வியல் வழியிலேயே நம் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதாரங்களையும் உள்ளடக்கி நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்கள். அதை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக தர வேண்டிய கடமை நம்மில் ஒவ்வொருவருக்கும் உண்டு.

நம்மில் சாதி மத மொழி இன பேதங்கள் இருக்கலாம். ஆன்மீக வழிபாட்டு முறைகளில் பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த மண்ணின் காலப் பொக்கிஷங்களான ஆலயங்கள் மத வழிபாட்டுத்தலங்கள் என்பதை கடந்து இந்த பூமியின் பாரம்பரிய சின்னங்கள். கலாச்சார பொக்கிஷங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டியது மதம் மொழி இனம் அப்பாற்பட்ட தேசிய கடமை . கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித தர்மம் .ஆனால் தமிழகத்தின் துரதிஷ்டம் பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்ற பெயரில் ஹிந்து தர்மத்தையும் அதன் ஆலயங்களையும் அணு அணுவாக சிதைத்து வருகிறது . கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் ஒவ்வொரு அணுவையும் பாதுகாக்க வேண்டிய மாநில அரசே இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் ஆலயங்களை முற்றாக சிதைத்து வருகிறது.

சமீபத்தில் பூலோக வைகுண்டம் என்றும் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரம் ஒரு பகுதி சிதிலமடைய தொடங்கியது . பாதுகாப்பு நடவடிக்கையாக கோபுரத்தின் அருகாமையில் இருந்த கடைகள் வீடுகள் அதில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். சில தினங்களில் கோபுரத்தின் சுற்றுச்சுவர் முழுவதுமாக சரிந்து விழுந்தது. இன்று வரை இந்து அறநிலையத்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் தினமும் பல லட்சம் உண்டியல் வருமானம் குவிக்கும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இந்து அறநிலையத்துறையின் அலுவலகங்களும் பல லட்சம் பெறுமான ஆடம்பர வாகனங்களும் வரிசை கட்டி நிற்கும். அத்தனையும் உலகெங்கும் உள்ள இந்து மக்கள் ஆன்மீக அர்பணிப்பாக ரங்கனுக்கு காணிக்கையாக செலுத்திய பக்தியின் சமர்ப்பணம்.

ஸ்ரீரங்கம் கோபுரம் சிதைந்த ரணமே ஆறாத நிலையில் தற்போது திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் சிதைவு வெளிப்படுவதாக தகவல்கள் வெளியாகிறது. தற்காலிகமாக உலோக கம்பிகள் கட்டுமானங்கள் மூலம் கோபுரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபுரத்தின் அருகில் வசிப்பவர்கள் வணிக வளாகங்களில் இருப்பவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். பாதுகாப்பு கருதி அது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். அடுத்த சில தினங்களில் திருவண்ணாமலை கோபுரம் சரிந்தது என்று செய்தி வரும். அனைவரும் ஐயோ என்று மனம் கலங்கி ஒரு நிமிடம் கண்ணீர் சிந்து விட்டு அமைதியாக கடந்து போய் விடுவோம். ஆனால் உண்மையில் இங்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோபுரத்தின் பராமரிப்பு அதன் சுற்றுச்சூழல் பலப்படுத்தும் நவீன கட்டுமானங்கள் உள்ளிட்டவையே. ஆலயத்தின் கோபுரங்கள் அதன் கட்டுமானங்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு கட்டுமானங்களையோ நடவடிக்கைகளையும் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் அளவில் அனுமதிக்காமல் சூழலியல் ரீதியாக ஆலயங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் முதலில் தேவை.

உலகில் பாரம்பரிய அடையாளமான யுனெஸ்கோவால் அடையாளம் காணப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் ஆலயங்கள் அதன் ராஜகோபுரங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க ஒரு சில மீட்டர்கள் வரையிலும் உயர்ந்த கட்டுமானங்களுக்கோ ஆழமான கட்டுமான பணிகளுக்கோ அனுமதி இல்லை. ஆனால் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் சட்ட விதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டு கோவில் கோபுரத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அத்தனை கட்டுமானங்களும் அங்கு நடக்கிறது . அதை இந்து அறநிலையத்துறை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. காரணம் அவர்களுக்கு தேவை அந்த ஆலயம் சிதைந்து விழ வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நேரடி மறைமுக பொருளாதார ஆதாயங்களும் அரசியல் ஆதாயங்களும் இருக்கக்கூடும். அதனால் அவர்கள் நிச்சயம் கள்ள மவுனம் தான் காப்பார்கள்.

மதுரை மீனாட்சி கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் எல்லாம் இந்த நாட்டின் பாரம்பரிய பொக்கிஷங்கள். ஆன்மீகத்தின் அடையாளங்கள். கலை இலக்கிய கலாச்சாரத்தின் உச்சங்கள் அதைவிட காட்டிலும் இங்குள்ள சனாதன தர்மத்தின் உறைவிடங்கள். அவ்வகையில் ஒவ்வொரு சனாதனிக்கும் இந்த ஆலயத்தின் பாதுகாப்பிலும் பங்களிப்பிலும் கடமையும் உரிமையும் இருக்கிறது . ஆனால் அதை இங்குள்ள மக்கள் மறந்தோ அல்லது மறுதலித்தோ போவது அவர்களின் துரதிருஷ்டமே. பண்டிகைகள் விழா காலங்களில் ஆலயங்களில் தரிசனம் செய்வது . குடும்ப விழாக்கள் விசேஷ நிகழ்வுகளை ஆலயங்களில் முன்னெடுத்து நலம் பெறுவது என்று தங்களின் ஒவ்வொரு சுயநல சார்பிலும் இறைவனையும் ஆலயத்தையும் நாடி இருக்கும் மக்கள் . அதே ஆலயத்திற்கு ஒரு பிரச்சனை கோவில் பொக்கிஷங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் ஆலயத்தின் நிர்வாகத்தில் ஒரு அத்துமீறல் என்று வருமானால் தங்களுக்கும் அந்த பிரச்சனைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கிப் போகிறார்கள். அந்த விவகாரங்கள் எல்லாம் ஏதோ கட்சி அரசியல் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவை. ஏதேனும் ஒரு இந்து அமைப்போ ஏதேனும் கட்சிகளோ பார்த்துக் கொள்ளும் என்று ஒதுங்கிப் போகிறார்கள்.

அப்படி ஒதுங்கி போகும் அவர்கள் இந்த ஆலயங்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் அவர்கள் எதிர்பார்க்கும் இந்து அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் தேர்தலிலோ அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ ஆதரவோ பலமோ வழங்கவும் தயாராக இல்லை. ஆனால் இந்த ஆலயங்களை சிதைத்து போடுபவர்களுக்கு இதையெல்லாம் அழித்து இந்த ஆலயத்தின் பொக்கிஷங்களை கொள்ளை அடித்து மதமாற்றத்திற்கும் மத பயங்கரவாதத்திற்கும் துணை போகும் சனாதன விரோதிகளுக்கு முழு அரசியல் ஆதரவை வழங்கி அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள். பிறகு எப்படி ஆலயங்கள் பாதுகாப்பு பெறும் ? அந்த ஆலயங்களை பாதுகாக்க யாரேனும் முன் வந்தால் கூட அதற்கு எப்படி அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்? என்று அவர்கள் யோசிக்க நேரமில்லை. ஆனால் அவர்களுக்கு ஒரு துயரம் துன்பம் ஏற்பாடு வரும் போது தவறாமல் இறைவனின் நினைவும் வரும் அதற்காக ஆலயத்திற்கும் போய் வேண்டுதல் நேர்த்திக்கடன் என்று வரிசையில் நிற்பார்கள். ஆனால் அதே ஆலயங்கள் கண் முன்னே இடித்து தரைமட்டம் ஆக்கினாலும் அமைதியாக கடந்து போவார்கள்.

இங்குள்ள மக்களுக்கு இறை நம்பிக்கை என்பதை கடந்து ஆன்மீக ஈடுபாடு இல்லாததே இவ்வளவு ஆலய சீரழிவிற்கும் முதல் காரணம். தான் துயருறும் போது ஆலயத்தில் போய் தானே இறைவன் முன் நிற்கிறோம் .இன்று அந்த ஆலயங்கள் பாதுகாக்க படாவிட்டால் நாளை நாமும் நம் சந்ததியும் மனம் துயருறும்போது போய் நிற்பதற்கு கூட ஒரு இடம் இருக்காது என்ற எதிர்கால சிந்தனையும் இல்லை. இந்த ஆலயங்கள் எல்லாம் உருவாக்கி வைக்க எத்தனை ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கும்? எத்தனை லட்சம் கோடிகள் செலவழிக்கப்பட்டிருக்கும் ? இதன் பின்னிருக்கும் உழைப்பு கலை நுணுக்கங்கள் அர்ப்பணிப்பு இவையெல்லாம் எத்தனை ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் சமக்காலத்தில் நம்மால் சாதிக்க முடியுமா? அவ்வகையில் நம் முன்னோர்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கி ஆன்மீக உறைவிடங்களாக கலை பொக்கிஷங்களாக நமக்கு கொடுத்த இந்த ஆலயங்களை நாம் பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்சம் அதை நாம் அடுத்த தலைமுறைக்காவது பத்திரமாக பராமரித்து கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் இல்லை. தொலைநோக்குப் பார்வையும் இல்லை.

ஆனால் ஆலயத்தின் சொத்துக்களை குத்தகைக்கு எடுப்பதற்கும் வணிக வளாகங்களை வீடுகளை குறைந்த வாடகையில் எடுப்பதற்கும் கட்சி அரசியல் ரீதியாக போட்டா போட்டி இருக்கும்‌ அதில் யார் பெரியவர் ? என்று நீதிமன்றமும் போவார்கள் . வெட்டு குத்து என்று அசம்பாவிதங்களும் நிகழ்த்துவார்கள். அவர்களின் சுயநலம் மட்டுமே பிரதானம். ஆலயமும் அதன் பாதுகாப்பும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. உண்மையில் தமிழகம் எப்படிப்பட்ட துரதிஷ்டமான மக்களை மலிவான எண்ணம் கொண்ட மக்களை தன் வசம் வைத்திருந்தால் இங்குள்ள ஆலயமும் அதன் பாதுகாப்பும் ஒவ்வொரு நாளும் இப்படி சிதைந்து வரும்? அதையும் அமைதியாக வேடிக்கை பார்த்து ஒரு சமூகம் கடந்து போகும் எனில் இங்கு பக்தி என்பது உண்மையில் இருக்குமா ? அல்லது பகல் வேஷமாக இருக்குமா ? என்ற கேள்வியை வேதனையாக எழுகிறது.

தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையும் அது கட்டமைக்கப்பட்ட சதிப் பின்னணியும் அனைவரும் அறிந்ததே. இதை மத்திய அரசோ அது சார்ந்த கட்சியாளர்களோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவை எல்லாம் தெரிந்தும் கூட இன்னமும் தமிழகத்தில் இருக்கும் ஆலயங்களை தொடர்ந்து சிதைவதும் அவை அழிவின் விளிம்பில் நிற்பதை பார்த்தும் கூட மத்திய அரசு மவுனம் காப்பதும் ஆன்மீகவாதிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. காரணம் தமிழகத்தில் இருக்கும் ஆலயங்கள் இந்த தேசத்தின் ஆன்மீகப் பொக்கிஷங்கள் தவிர தமிழக இந்து அறநிலையத்துறையின் சொத்துக்கள் அல்ல. இதை முதலில் மத்திய அரசு உணர வேண்டும்.

தமிழகத்தில் இருக்கும் ஆலயங்கள் எல்லாம் இங்குள்ள இந்து மக்களுக்கு மட்டும் உரிமையான ஆலயங்கள் இல்லை. அவை மாநில எல்லை கடந்து பாரதம் முழுமைக்கும் ஆன சனாதனத்தின் அடையாளங்கள். உண்மையில் சொன்னால் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சனாதனிக்கும் பாதியப்பட்ட ஆன்மீக பொக்கிஷங்கள் தான் இங்குள்ள ஒவ்வொரு ஆலயமும் . அதன் நிர்வாகம் வேண்டுமானால் மாறுபடலாம் . வழிபாட்டு முறைகள் வேறுபடலாம் .ஆனால் சனாதனத்தின் அடையாளமாக இருக்கும் ஒவ்வொரு ஆலயமும் ஒட்டுமொத்த உலகளாவிய சனாதரத்தின் பொதுச்சொத்து என்பதை மத்திய அரசு உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இத்தனை ஆலயங்கள் சிதையும் போதும் அவை ஏதோ ஒரு மாநிலத்தின் சீரழிவு. ஒரு மாநில இந்து அறநிலைய துறையின் அலட்சியம் என்று மத்திய அரசு கடந்து போக முடியாது. இங்குள்ள ஆலயங்களை அதன் பொக்கிஷங்களை ஆன்மீக அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய அரசுக்கும் உண்டு. இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு போக வேண்டியது மத்திய கலை இலக்கியம் கலாச்சார துறை சார்ந்த அமைச்சரகத்தின் நேரடி கவனத்திற்கும் கொண்டு போக வேண்டிய கடமை தமிழகத்தின் ஆளுநருக்கு உண்டு. அதை இங்குள்ள இந்து அமைப்புகளும் கட்சிகளும் தமிழகத்தின் பாஜக தலைவரும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இந்து அறநிலையத்துறை இருக்கிறது . அந்த இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் தானே ஆலயங்கள் இருக்கிறது ? பிறகு எப்படி மத்திய அரசு இதில் தலையிட முடியும்? இதில் வீணான குழப்பங்கள் வருமே என்று கேள்வி எழுப்பினால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது . இந்து அறநிலையத்துறை ஆலயத்தின் நிர்வாகத்திற்காக கட்டமைக்கப்பட்டு அதன் உண்டியல் வருவாயுக்காக தான் கோவில் வாசலில் காத்திருக்கிறது . தவிர இந்த ஆலயத்தை பராமரிக்க வேண்டும். இதன் பொக்கிஷங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையெல்லாம் அறநிலையத்துறைக்கு கிடையாது . அந்த வகையில் அது இந்து சமய அழிப்பு துறையாக தான் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் இந்து சனாதன அழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்து சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்று பேசியவரை கைத்தட்டி ஆரவாரம் செய்து அந்த துறை சார்ந்த அமைச்சரால் முடிந்தது . அதை யாரும் மறந்து விட வேண்டாம்.

இதே தமிழகத்தில் உளவுத்துறையின் எச்சரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக கண்காணிப்புகள் தகவல் ஒருங்கிணைப்புகள் மாநில அரசால் மறுக்கப்பட்டது . ஆனால் கோவையில் ஒரு பெரும் சதி சம்பவம் இறையருளால் தோல்வி அடைந்த பிறகு மத்திய அரசு நேரடியாக களமிறங்கி மாநிலம் முழுவதிலும் சோதனைகள் விசாரணைகள் கைதுகள் என்று செய்து வருகிறது. அந்த வகையில் தேசத்தின் இறையாண்மை பாதுகாப்பு என்று வரும்போது மாநில அரசை மீறி மத்திய அரசு எப்படி நேரடியாக களமிறங்குகிறதோ? அதே வழியில் இந்த தேசத்தின் தர்மத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கூட மத்திய அரசுக்கு இருக்கிறது . மாநில அரசு உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அல்லது மாநில அரசு எதிர்க்கிறது வேடிக்கை பார்ப்பது மத்திய அரசுக்கு அழகல்ல. மாநில அரசின் தலையீடு குறுக்கீடு இந்து சமய அறநிலையத்துறை அத்தனையையும் கடந்து இங்குள்ள ஆலயங்களையும் அதன் ஆகமங்களையும் ஆலயத்தின் பொக்கிஷங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசிற்கு இருக்கிறது . அதற்கு உரிய தகவல் திரட்டு ஒருங்கிணைப்பு விஷயங்களை தமிழக பாஜக தலைவர் முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசின் கவனத்திற்கு இங்குள்ள ஆலயங்கள் நிலையை தமிழக பாஜக தலைவர் மற்றும் மாநில ஆளுநர் கொண்டு போய் சேர்க்க வேண்டும என்பது இங்கு உள்ள ஒவ்வொரு சனாதனியின் கண்ணீர் மல்க கரம் குவித்து முன் வைக்கும் வேண்டுகோள்.


Share it if you like it